என்ன ஒரு மோசமான கேப்டன்சி. இதுமாதிரி மட்டமான கேப்டன்சியை நான் பாத்ததே இல்ல – கம்பீர் ஆவேசம்

Gambhir

ஐபிஎல் தொடரின் பத்தாவது போட்டி இன்று மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும், கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் மேக்ஸ்வெல் மற்றும் ஏபிடி அதிரடியால் 204 ரன்களை குவித்தது. சென்னை மைதானத்தில் 160 ரன்கள் வெற்றிக்கு போதுமான இலக்காக இருக்கும் இந்த வேளையில் பெங்களூரு அணி 200 ரன்களை கடந்தது எளிதாக இந்த போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

maxwell

இந்நிலையில் இந்த போட்டியில் கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் கேப்டன்சி குறித்து மிகக்கடுமையாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கௌதம் கம்பீர் விமர்சித்துள்ளார். இதுகுறித்து கம்பீர் கூறும் கூறுகையில் : பெங்களூரு அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் இரண்டாவது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து அவரை நான்காவது ஓவரை வீச அழைத்திருக்க வேண்டும் ஆனால் நான்காவது அவரை அவருக்கு பதிலாக ஷாகிப் அல் ஹசன் கொடுத்து ஆட்டத்தின் போக்கையே மோர்கன் மாற்றிவிட்டார். ஒரே ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தி நல்ல பார்மில் இருக்கும் வருணுக்கு ஓவரை கொடுக்காதது முட்டாள்தனமான ஒன்று என்று கம்பீர் கூறியுள்ளார்.

மேலும் இது மாதிரியான மோசமான கேப்டன்சி நான் பார்த்ததே இல்லை என்றும் கம்பீர் ஆவேசமாக கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இந்திய வீரர்களில் யாராவது இதுபோன்று கேப்டன்சி செய்து இருந்தால் அனைவரும் முந்திக் கொண்டு வந்து விமர்சனம் செய்திருப்பார்கள் எனவும் அவர் ஒரு காட்டமான கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

varun 1

மோர்கன் செய்த இந்த தவறாலேயே பெங்களூர் அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தது என்றும் சரியான நேரத்தில் வருண் சக்கரவர்த்தியை பந்துவீச வைத்து கட்டுப் படுத்தியிருந்தால் இந்த மோசமான நிலை ஏற்பட்டிருக்காது என்றும் கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.