ஐ.சி.சி யின் இந்த விதி கேலியானது மற்றும் அபத்தமானது – ஐ.சி.சி யை நேரடியாக தாக்கி பேசிய கம்பீர்

Gambhir
- Advertisement -

உலக கோப்பை இறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று மோதின.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement -

அதன் பிறகு ஆட துவங்கிய இங்கிலாந்து அணி, ஐம்பது ஒவேரில் 241 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக மேட்ச் டை ஆனது. அதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் நிர்ணயிக்கப்பட்டது. அந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.

Eng-1

இந்நிலையில் இந்த போட்டியில் பயன்படுத்தப்பட்ட விதி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறியதாவது : இந்த விதியை பயன்படுத்தி எப்படி இறுதி முடிவு எடுத்தார்கள் என்பது புரியவில்லை. icc யின் இந்த விதி அபத்தமானது மேலும் முட்டாள்தனமாகவும் எனக்கு தோன்றுகிறது. கடைசி வரை சிறப்பாக விளையாடிய இரண்டு அணிகளுக்கும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன்.

Archer 2

என்னை பொறுத்தவரைக்கும் இரண்டு அணிகளுமே வெற்றியாளர்கள் தான் என்றும் மேலும் என்னை பொறுத்த வரை இந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறவும் இல்லை, நியூசிலாந்து தோல்வி அடையவில்லை என்பதே உண்மை. வெற்றியை முடிவு செய்வதற்கான பண்படுத்தப்பட்ட இந்த விதியை அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதே எனது கருத்து என்று கம்பீர் வெளிப்படையாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement