என்னோட 7 வருட ஐ.பி.எல் கேப்டன்சியில் நான் பார்த்து பயந்த பேட்ஸ்மேன் இவர்தான் – கம்பீர் ஓபன்டாக்

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கம்பீர் அவரது தலைமையில் இரு முறை ஐபிஎல் கோப்பையை பெற்று தந்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் சிறந்த கேப்டன்களில் ஒருவரான கௌதம் கம்பீர் தற்போது தான் இந்த ஏழு வருட கேப்டன்சியில் சந்தித்த கடினமான எதிரணி பேட்ஸ்மேன் குறித்து தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அவர் அளித்துள்ள இந்தப் பேட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தான் சந்தித்ததிலேயே மிகக் கடினமான பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.

Gambhir 1

- Advertisement -

எப்போதுமே கொல்கத்தா அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி விளையாடும் வீரர்களில் ரோஹித்தும் ஒருவர். ரோகித் கொல்கத்தா அணிக்கு எதிராக ஆடிய போதெல்லாம் நிறைய ரன்கள் குவித்துள்ளார். இன்னும் நான் தெளிவாக கூற முடியும் மற்ற பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்யும்போது நான் பெரியதாக பீல்டிங் வியூகங்களையெல்லாம் அமைப்பதில்லை.

ஆனால் ரோகித் சர்மா பேட்டிங் செய்யும் போது நிச்சயம் எனக்கு பீல்டர்களை நிறுத்த பயம் ஏற்படும் ஏனென்றால் அவரால் ஸ்பின் பவுலிங்கில் சிறப்பாக விளையாட முடியும். அதே போன்று வேகப்பந்து வீச்சில் சிறப்பாக விளையாட முடியும். மேலும் தடுப்பாட்டமும் ஆட முடியும் அதே வேகத்தில் இருமடங்கு அதிரடியான ஆட்டமும் அவரால் ஆட முடியும்.

rohith 1

இதன் காரணமாகவே அவர் விளையாடும் போது ஒருவித பதட்டம் இருக்கும். நிச்சயம் ரோகித் தற்போதைய கிரிக்கெட் உலகில் அட்டாக்கிங் பேட்ஸ்மேன் என்றால் அது மிகையல்ல என்று கம்பீர் தனது கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எத்தனையோ அதிரடி வீரர்கள் ஐபிஎல்லில் கலக்கி உள்ள பட்சத்தில் ரோகித் சர்மா குறித்து அவர் அளித்துள்ள இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement