இவரால் என்றுமே அடுத்த தோனியாக மாற முடியாது. அதுக்கு இவர் சரிபட்டு வரமாட்டாரு – வெளிப்படையாக பேசிய கம்பீர்

Gambhir

கடந்த சில வருடங்களாகவே தோனி ஓய்வு பெறுவார் என்ற காரணத்தினால் அடுத்த விக்கெட் கீப்பர் கான தேடல் நடந்து கொண்டே வந்தது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். ஆனாலும் தற்போது வரை நிரந்தர விக்கெட் கீப்பர் இந்திய அணிக்கு கிடைத்த என்று கேட்டால் அது கேள்விக்குறிதான்.

ஏனெனில் டோனிக்கு பதிலாக இந்திய அணியின் விக்கெட் கீப்பராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இளம் வீரர் ரிஷப் பண்ட் துவக்கத்தில் சரியாக விளையாடினாலும் அதன் தொடர்ந்து மோசமான பார்ம் காரணமாக தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மேலும் தோனி போன்ற மாபெரும் வீரரின் இடத்தை அவரால் நிரப்ப முடியாது ரசிகர்கள் வெளிப்படையாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அவர்கள் கூறியது போலவே தொடர்ச்சியான சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவரது கீப்பர் பதவி பறிக்கப்பட்டு ராகுலிடம் கொடுக்கப்பட்டது.

dhoni with pant

இந்நிலையில் தற்போது பண்டை டோனியுடன் ஒப்பிட்டு கம்பீர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : முதலில் பண்டை தோனியோடு ஒப்பிட்டுப் பேசுவதை நிறுத்த வேண்டும். பண்ட் ஒருபோதும் தோனி ஆக முடியாது. அவரது இயல்பான ஆட்டத்தை விளையாடவேண்டும். விக்கெட் கீப்பிங், பேட்டிங் என நிறைய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

- Advertisement -

Pant

ஏனெனில் அவரது ஆட்டம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது என்று வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் இந்த நடப்பு சீசனில் 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள பண்ட் 285 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். அதுமட்டுமின்றி டி20 போட்டிகளில் அபாரமான சிக்ஸர்களை அடிக்கும் அவர் இம்முறை சிக்ஸர்களை பெரிதாக அடிக்கவில்லை என்பது எதார்த்தமான உண்மை என்பது குறிப்பிடத்தக்கது.