கூடிய சீக்கிரமே இந்திய அணிக்காக இவர் விளையாடுவாரு. அதற்கான தகுதி இவரிடம் இருக்கு – கம்பீர் கருத்து

Gambhir

கடந்த 22ம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்கள் அடித்தது. அதன் பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயித்த இலக்கை வெறும் 16.3 ஓவர்களில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியின் ஓபனிங் வீரர் படிக்கல் குறிப்பாக ருத்ரதாண்டவம் ஆடினார். 52 பந்துகளில் 101 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் நின்றார்.

padikkal 1

இவரை கட்டுப்படுத்த ராஜஸ்தான் அணியின் பவுலர்களால் முடியவில்லை. அதன் காரணமாக இந்த இலக்கை மிக எளிதில் பெங்களூரு அணியால் எட்ட முடிந்தது. இந்நிலையில் இவரது ஆட்டம் குறித்து இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் ஒரு சில விஷயங்களை கூறியிருக்கிறார். கொரோனா காரணமாக முதல் போட்டியில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அதன்பிறகு ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் அவர் களம் இறங்கினார்.

கொரோனாவிலிருந்து மீண்டு வந்து விளையாடுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதன் காரணமாக அவர் விளையாடிய முதல் இரண்டு போட்டிகளில் மிக சுமாராக அமைந்தது. ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், முதலிரண்டு போட்டிக்கும் சேர்த்தே ஒரு போட்டியில் விளையாடி விட்டார். இவர் இவ்வளவு அற்புதமாக விளையாடுவார் என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.

Padikkal

சென்ற ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் இவரே. நிச்சயமாக இந்த ஆண்டும் இனிவரும் போட்டிகளில் இவர் நன்றாக விளையாடுவார். இவர் ஆடுவதை பார்க்கையில் வெறும் 2 அல்லது 3 பந்துகளில் சரியாக விளையாடாமல் போய் அவுட் ஆவது போல் தெரியவில்லை. அணிக்காக கடைசி வரை நின்று நிதானமாக விளையாட வேண்டும் என்கிற பொறுப்பு தெரிகிறது.

- Advertisement -

நிச்சயமாக இவர் இந்திய அணிக்காக வருங்காலத்தில் விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அதனுடைய அடுத்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. அந்த போட்டி நாளை மதியம் வான்கடே மைதானத்தில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.