பஞ்சாப் அணியில் உள்ள இந்த வீரர் டிவில்லியர்ஸ்க்கு சமமான திறமை உடையவர் – கம்பீர் புகழாரம்

kxip
- Advertisement -

இந்தியாவில் ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. 12 ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், ஒரு சில அணிகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மும்பை அணி  4 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறையும் கோப்பையை கைப்பற்றி இருக்கின்ற. பெரும்பாலும் இந்த இரண்டு அணிகள் தான் வருடாவருடம் மாறி மாறி கோப்பையை கைப்பற்றி வருகின்றனர்.

kxip

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி போன்ற அணிகள் ஒருமுறை கூட இந்த கோப்பையை தொட்டுக்கூட பார்த்ததில்லை. இறுதிப் போட்டி வரை சென்றாலும் அதிர்ஷ்டமின்றி அவர்கள் தோற்ற நிகழ்வுகளும் உண்டு. இப்படி இருக்க இந்த முறை டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் தங்களது அணியின் கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றி பல்வேறு மாற்றங்களை செய்துகொண்டுதான் வருகிறது.

அந்த வகையில் தற்போது இந்தாண்டு பல இளம் வீரர்களையும், அனுபவம் வாய்ந்த வீரர்களையும், டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் சேர்த்துள்ளன. இதன் காரணமாக இந்த முறை இந்த இரண்டு அணிகள் பெரிய அளவில் சாதிக்க வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியிலும் ஒரு ஏபி டிவிலியர்ஸ் இருக்கிறார் என்று பேசியிருக்கிறார் கவுதம் காம்பீர்.

Pooran

இதுகுறித்து அவர் கூறுகையில் “ரிவர்ஸ் ஸ்வீப் மற்றும் ஸ்வீப் என அனைத்து விதமான வித்தியாசமான ஷாட்களையும் ஆடக்கூடிய வீரர், நிகோலஸ் பூரான். இவர் போன்ற இளமையான திறமையான வீரர்கள் அணில் கும்ப்ளே விடம் பயிற்சி பெறும்போது மிகச் சிறப்பாக விளையாடுவார்கள். அணில் கும்ப்ளே இவர்களிடம் உள்ள முழுத் திறமையும் வெளிக் கொண்டு வந்து விடுவார்.

pooran

இந்த சீசனில் இவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். இது போன்று அனைத்து விதமான ஷாட்களையும் ஆடும் நிக்கோலஸ் பூரன், ஏபி டிவிலியர்ஸ் இணையாக 360 என்று அழைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் கௌதம் கம்பீர்.

Advertisement