இந்த வருட சீசனில் இவரது பந்துவீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் ரொம்ப கஷடப்படுவாங்க – கம்பீர் பேட்டி

Gambhir
- Advertisement -

இன்னும் இரண்டு வாரங்களில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் ஆரவாரமாக துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான கருத்துகளை பல முன்னாள் வீரர்களும் தெரிவித்து வருகின்றனர். அதில் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் ? எந்த பட்ஸ்மன் சிறப்பாக விளையாடுவார் ? எந்த பந்துவீச்சாளர் சிறப்பாக பந்து வீசுவார் ? எந்த அணி மற்றவர்களுக்கு சவாலாக இருக்கும் ? என பல்வேறு விடயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

ipl

- Advertisement -

அந்த வகையில் தற்போது கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய வீரருமான கௌதம் கம்பீர் இந்த ஐபிஎல் சிறப்பாக செயல்பட இருக்கும் பந்துவீச்சாளர் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது கூறுகையில் : என்னைப் பொறுத்தவரை முக்கியமான விஷயம் யாதெனில் இந்த ஐபிஎல் சீசனில் சுனில் நரைன் பந்து வீச்சில் அசத்துவார் என்று கூறியுள்ளார்.

அவர் பந்தை மறைத்து வைத்து வீசும் போது அது பேட்ஸ்மேன்களுக்கு கூடுதலான கஷ்டத்தைக் கொடுக்கும். அப்படி பந்துவீசும் போது பந்து உள்ளே வருகிறதா ? அல்லது வெளியே செல்கிறதா ? என பேட்ஸ்மேன்கள் கணிக்க முடியாமல் திணறுவார்கள். மேலும் மிகவும் தாமதமாகத்தான் அவர் கையிலிருந்து பந்தை ரிலீஸ் செய்கிறார்.

kuldeep

அதனால் பேட்ஸ்மென்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள். ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக இருக்கும்பொழுது பந்து கிரிப் ஆனால் அவருக்கு மிகவும் பயனுள்ளதாக மாறிவிடும். பந்தில் சற்று வேகத்தை கூட்டினால் நிச்சயம் அவர் இத்தொடரில் சிறப்பாக வீசுவார். அதுமட்டுமின்றி அவரின் மாயாஜால பந்துவீச்சால் அசத்துவார் என்றும் கமபீர் கூறியுள்ளார்.

கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான சுனில் நரேன் இதுவரை கொல்கத்தா அணிக்காக மட்டும் 110 போட்டிகளில் 122 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement