ஐ.பி.எல் தொடரில் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர்களில் இவரும் ஒருவர் – கம்பீர் ஓபன் டாக்

Gambhir

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ipl

வரும் சனிக்கிழமை துவங்க உள்ள இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரும் தங்களது கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசுவார்கள் ? எந்த பேட்ஸ்மேன்களை அதிக ரன்களை குவிப்பார் ?எந்த அணி வெற்றி பெறும் ? போன்ற பல்வேறு கருத்துக்களை அவர்கள் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விளையாடி வரும் முஹமது நபி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : வார்னர், பேர்ஸ்டோ, வில்லியம்சன், ரஷீத் கான் ஆகிய மிகப் பெரிய வீரர்கள் அந்த அணியில் உள்ளதால் முகமது நபிக்கு அனைத்துப் போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கிடைப்பது இல்லை.

Nabi

ஆனால் நபி வேறு ஏதாவது ஒரு அணியிலிருந்து இருந்தால் அவருக்கு 14 போட்டிகளிலும் விளையாட வாய்ப்பு கிடைத்திருக்கும். மேலும் ஒரு சீசனில் 14 போட்டிகளிலும் அவரை ஆட வைத்தால் அவர் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை அறியமுடியும். என்னை பொருத்தமட்டில் ஐபிஎல்லில் முறை மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர்களில் முகமது நபியும் ஒருவர். டிவில்லியர்ஸ், வார்னர், ரசித் கான் ஆகியோருக்கு சமமானவர் முகமது நபி என்று கம்பீர் கூறியுள்ளார்.

- Advertisement -

Nabi-2

கடந்து 2017 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 13 ஐபிஎல் போட்டியில் மட்டுமே நபி விளையாடியுள்ளார். இந்த 13 போட்டிகளிலும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் பேட்டிங்கில் 148.35 ஸ்டிரைக் ரேட்டில் 135 ரன்கள் குவித்துள்ளார். அதிலும் ஒரே போட்டியில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.