கிரிக்கெட் உலகின் அடுத்த ரசல் இவர்தான். இந்த ஐ.பி.எல் தொடரில் அவர் அசத்துவார் – கமபீர் நம்பிக்கை

Gambhir

சிறப்பாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் விலைபோன பல்வேறு வீரர்களில், கவனிக்க வேண்டிய ஒரு பெயர் கைல் ஜேமீசன். நியூசிலாந்தை சேர்ந்த வலதுக்கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஏற்கனவே டெஸ்ட் போட்டி கிரிக்கெட்டில் தனது திறமையை எல்லோருக்கும் நிரூபித்துவிட்டார். 12 இன்னிங்ஸல் ஆடி இதுவரை 36 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் . அதில் நான்கு 5விக்கெட்-ஹாலும் ஒரு 10விக்கெட்-ஹாலும் எடுத்துள்ளார்.

Jamieson

தற்போது அவரைப்பற்றி கம்பீர் சில வார்த்தைகளை பேசியுள்ளார். அவரது 6’8 என்கிற அவரது உயரம் பந்தை நகர்த்துவதற்கான திறனை பலப்படுத்தியுள்ளது. மேலும் இன்னும் கொஞ்சம் பயிற்சி கொடுத்தால் ஜேமிசன் பல ஐபிஎல் அணிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருப்பார் என்று கம்பீர் கூறியுள்ளார். மேலும எதிர்காலத்தில் ஜேமீசன் ஒரு சூப்பர் ஸ்டாராக மாற முடியும் என்று கருதுகிறேன். ஜேமீசன் ஒரு நீண்ட காலத்திற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு இளைஞன் என்றும் கம்பீர் கூறியுள்ளார்.

ஜேமீசன் மிகவும் உயரமானவர் அதனால் வழக்கமாக தொடர்ந்து அவரால் 140 கி.மீ வேகத்தில் பந்து வீச முடியும் என்றும், வில்லோவுடன் பந்தை நியாயமான தூரத்தில் அடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும், ஜேமிசன் அடுத்த ஆண்ட்ரே ரஸ்ஸல் ஆகலாம் என்று கம்பீர் கூறியுள்ளார்.
“கைல் ஜேமீசன் இந்த நேரத்தில் ஒரு பெரிய பெயர் அல்ல, ஆனால் அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக கட்டாயம் பிற்காலத்தில் மாறுவார். எல்லா உரிமையாளர்களுக்கும் அவரைப் பிடிக்கும். மேலும் அவர் நீங்கள் நீண்ட காலத்திற்கு வைத்திருக்கக்கூடிய ஒருவர் என்பதால் அவருக்கு மவுசு எப்போதுமே இருக்கும்.

அவர் கிட்டதட்ட ஏழு அடி, அதனாலேயே அவரால் 140கி.மீ வேகத்தில் தொடரச்சியாக எப்போதும் எங்கேயும் பந்து வீச முடியும் மற்றும் பந்தை நீளமாக பவுன்சராக மாற்றி அடிக்க முடியும். ஜேமிசன் நம்பர் 6 அல்லது நம்பர் 7 இல் பேட் செய்தால் அவரால் பந்தை நியாயமான தூரத்தில் சுலபமாக பந்தை அடிக்க கூடிய ஆற்றல் உடையவர். இது ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரானது.

- Advertisement -

Jamieson

எனவே இவர் எப்போதும் தனது அணிக்கு பெரிய சொத்தாக இருப்பார் என்றும் கம்பீர் முடித்தார்.
கம்பீர் கணித்தது போலவே கைல் ஜேமிஷனை 15 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.இவர் எப்படி ஆடப்போகிறார் , 15 கோடிக்கு இவர் பொருத்தமானவர் தானா என்று அனைவரும் இவரது ஆட்டத்தை பார்க்க ஆவலோடு எதர்பார்த்து கொண்டு வருகின்றனர்.