- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாகிஸ்தானுடன் எந்த போட்டியிலும் விளையாடக்கூடாது.. இருந்தாலும் அந்த முடிவை அவங்கதான் எடுக்கனும் – கவுதம் கம்பீர்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2007 ஆம் ஆண்டு முதலே நடைபெறாமல் இருந்து வருகின்றன. இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான சுமூக உறவின்மை காரணமாக இருதரப்பு தொடர்களில் விளையாடா விட்டாலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி நடத்தும் பொதுவான தொடர்களில் மட்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. கடைசியாக நடைபெற்ற 2 ஐ.சி.சி தொடர்களிலும் கூட இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடைபெற்றன.

இந்திய அணி இனிமே பாகிஸ்தானுடன் விளையாடவே கூடாது : கவுதம் கம்பீர்

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததால் இந்திய அணி இனி எப்போதுமே பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடக்கூடாது என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதுகுறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாகவே அறிவித்திருந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கூறுகையில் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் உடனான அனைத்து போட்டிகளும் நிறுத்தப்பட வேண்டும். மேலும் இதனால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கலைக்கப்படலாம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணி இனி இருதரப்பு தொடர் மட்டுமல்ல ஐ.சி.சி போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : எல்லை தாண்டிய பயங்கரவாதம் முடிவுக்கு வரும் வரை இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் விளையாடக்கூடாது.

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான பதற்றமான உறவு காரணமாக 2007 முதல் எந்த ஒரு இருதப்பு தொடரிலும் இவ்விரு அணிகளும் விளையாடுவது கிடையாது. ஐசிசி நடத்தும் பொதுவான தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றனர். ஆனால் இனிமேல் அதுவும் நிறுத்தப்பட வேண்டும். நாம் அவர்களுடன் விளையாடுகிறோமா? வேண்டாமா? என்பதற்கான முடிவை இந்திய அரசாங்கம் தான் எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க : கேட்ச், ரன் அவுட் விட்டதால் இல்லை.. குஜராத்திடம் மும்பை தோற்க இதான் 2 காரணம்.. பாண்டியா ஏமாற்றம்

கிரிக்கெட் போட்டியோ அல்லது வேறு எந்தவொரு நிகழ்வோ இந்திய வீரர்கள் மற்றும் இந்திய குடிமக்களின் உயிரை விட எதுவும் முக்கியமானது கிடையாது. இந்த ஆண்டு ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தானுடன் விளையாட வேண்டுமா, வேண்டாமா என்று குறித்து பிசிசிஐ-யும், இந்திய அரசாங்கமும் தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம் என கௌதம் கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -