டி20 உலககோப்பை அணியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கை சேர்க்க கூடாது. ஏன் தெரியுமா? – கம்பீர் அதிரடி

Gambhir
Advertisement

தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கிற்கு உலகக்கோப்பை அணியில் இடம் கொடுக்கக்கூடாது என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான கௌதம் கம்பீர் கூறியிருக்கும் கருத்து தற்போது இணையத்தில் அதிக அளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இந்திய அணியின் அனுபவ வீரராக பார்க்கப்படும் தினேஷ் கார்த்திக் அவ்வபோது இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளேயும் வெளியேயும் விளையாடி வந்தாலும் நிச்சயம் இந்தியாவிற்காக 2 டி20 உலக கோப்பையிலாவது விளையாடி கோப்பையை கைப்பற்றிய தர வேண்டும் என்ற எண்ணத்தோடு தனது கடினமான உழைப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

DInesh Karthik

நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் நிச்சயம் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று கூறியது போலவே பெங்களூர் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு தொடர்ச்சியான தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

- Advertisement -

அதோடு டி20 உலக கோப்பையில் விளையாடுவதே தனது லட்சியம் என்றும் அதற்காக தொடர்ந்து கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்து வருகிறார். அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக்கிற்கு உலக கோப்பை அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற ஒரு பேச்சு பரவலாக ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆனால் தினேஷ் கார்த்திக்கிற்கு உலக கோப்பை அணியில் இடம் கொடுக்கக்கூடாது என்று கம்பீர் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

Hardik Pandya Dinesh Karthik

இதுகுறித்து அவர் கூறுகையில் : தினேஷ் கார்த்திக் கடந்த மூன்று மாதங்களாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது உண்மைதான். அதனால்தான் அவருக்கு தற்போது தென் ஆப்பிரிக்கா தொடருக்கான அணியில் இடம் கிடைத்துள்ளது. அவரும் இந்த தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்து வருகிறார். ஆனால் என்னை பொறுத்தவரை அவர் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்றே நினைக்கிறேன். ஏனெனில் உலக கோப்பை தொடருக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதனால் அவரது இந்த செயல்பாட்டை அப்படியே தொடர வேண்டியது அவசியம்.

- Advertisement -

அதேபோன்று அணியில் இருந்து தற்போது ஓய்வில் இருக்கும் வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் போது தினேஷ் கார்த்திக்கை பிளேயிங் லெவனில் இணைப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விடயமாக இருக்கும். மேலும் அவரது இடம் அணிக்குள் குழப்பத்தையும் ஏற்படுத்தும். எனவே என்னை பொறுத்தவரை தினேஷ் கார்த்திக்-க்கு உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காது என்றே கருதுகிறேன்.

இதையும் படிங்க : ஜாம்பவான் டான் ப்ராட்மேனுக்கு அடுத்தப்படியாக சத்தமின்றி சாதனை படைத்து வரும் இந்திய வீரர் – தேர்வுக்குழு கவனிக்குமா?

மேலும் தற்போது தினேஷ் கார்த்திக் பினிஷர் ரோலில் விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக கடைசி 3 ஓவர்களில் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதற்காக மட்டுமே அவர் பயன்படுத்தப்பட்ட வருகிறார். இப்படி கடைசி 3 ஓவர்களில் விளையாடுவதற்காக மட்டுமே ஒரு வீரரை எல்லாம் தேர்வு செய்வது சரியாக இருக்காது என்பதனால் நிச்சயம் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது. எனவே தினேஷ் கார்த்திக் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்பட மாட்டார் என்பதே எனது கருத்து என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement