என்னது இவரு தோனிக்கு சமமா ? இவர் சாதிக்கனும்னா அவரோட சொந்த பேர்லயே சாதிக்கட்டும் – கடுப்பான கம்பீர்

Gambhir
- Advertisement -

தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆனால் தோனி ஓய்வு பெறுவதற்கு இரண்டு வருடத்திற்கு முன்னர் அவருக்கான மாற்று வீரரை தேடும் பணியில் இறங்கி விட்டது பிசிசிஐ. ஆனாலும் அந்த இடத்தை யாராலும் சரியாக நிரப்பமுடியவில்லை. ரிஷப் பந்த் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு பெரும்பாலான வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது மற்ற உள்ளூர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

Dhoni

சாம்சன் போன்ற வீரர்கள் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில், ஐபிஎல் தொடரிலும் நன்றாக விளையாடிவரும் உள்ளூர் விக்கெட் கீப்பர் களுக்கு தற்போது வரை பெரிதாக வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் சஞ்சு சாம்சன் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பி வருகிறார். இவரது ஆட்டத்தை பார்த்த அனைவரும் மெய்சிலிர்த்துப் போய் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர் .

- Advertisement -

குறிப்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர் இவரை பார்த்து : 14 வயதிலேயே நான் அவரைப் பார்த்து இருக்கிறேன். நீ தான் அடுத்த தோனி என்றும் கூறியிருக்கிறேன் என்று தெரிவித்திருந்தார். இதனால் கடுப்பான கௌதம் கம்பீர் சஞ்சு சம்சன் யார் மாதிரியும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அவருக்கு சஞ்சு சாம்சன் என்ற பெயர் இருக்கிறது. அவர் அவராகத்தான் இருப்பார் என்று சசி தரூருக்கு பதில் கொடுத்திருந்தார் கவுதம் கம்பிர்.

Samson

அதே நேரத்தில் ஸ்ரீசாந்த் இது போன்ற ஒரு கருத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். மேலும் அவரை யாருடனும் ஒப்பிட வேண்டாம் அவரது முழு திறமையை இன்னும் வெளிவரவில்லை என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

Advertisement