2011 உ.கோ இறுதிப்போட்டியில் நான் ஆட்டமிழக்க தோனியே காரணம் – கம்பீர் குற்றச்சாட்டு

Gambhir-1
- Advertisement -

இந்திய அணி கடந்த 2011-ம் ஆண்டு தோனியின் தலைமையில் 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த அந்த இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. அந்த போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் கண்டிப்பாக யாரும் மறந்திருக்க முடியாது. 275 ரன்கள் இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி துவக்கத்திலேயே சச்சின் மற்றும் சேவாக் ஆகிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்தது.

gambhir1

- Advertisement -

அப்பொழுது கம்பீர் மற்றும் விராட் கோலி ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் அணியை சரிவில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தது. கோலி அவுட் ஆனதும் யுவராஜ் இறங்குவார் என்று எதிர்பார்த்த சமயத்தில் தோனி களமிறங்கினார். மேலும் அந்த போட்டியில் தோனி அதிரடியாக விளையாடி வெற்றிகரமாக போட்டியை முடித்து வைத்திருந்தாலும் அந்த போட்டியை இறுதிவரை கொண்டுசென்றது மேலும் அணியை வலுவாக மீட்டெடுத்தது எல்லாம் கம்பீர் தான் அவரடித்த 97 ரன்கள் தான் இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றது என்றே கூறலாம்.

இந்நிலையில் கம்பீர் அந்த இன்னிங்ஸ் குறித்து பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : எல்லோரும் என்னிடம் இறுதி போட்டியில் 97 ரன்களில் அவுட் ஆனது குறித்து கேட்கிறீர்கள். ஆனால் அதற்கு நான் சொல்ல விரும்புவது இது மட்டும் தான் என்னுடைய தனிப்பட்ட ஸ்கோர் குறித்து நான் உலக கோப்பை இறுதி போட்டியில் எதுவும் நினைக்கவே இல்லை எனக்கு தேவை அந்த தருணத்தில் வெற்றிக்கான இலக்கை விரட்டி உலக கோப்பையை வெல்வது மட்டுமே அந்த எண்ணத்திலேயே நான் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தேன்.

yuvidhoni

ஒரு சமயத்தில் நான் இலக்கை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று விளையாடி வந்த நிலையில் தோனி என்னிடம் வந்து இன்னும் உங்கள் சதத்திற்கு மூன்று ரன்கள் மட்டுமே தேவை அதனால் சதத்தை பூர்த்தி செய்யுங்கள் அதன் பின்னர் போட்டியை சிறப்பாக முடித்துக் கொள்ளலாம் என்று நினைவூட்டினார். உடனே என்னுடைய கவனம் முழுவதும் இலக்கை விரட்டுவது தவிர்த்து என்னுடைய தனிப்பட்ட சதத்தின் மீது திரும்பியது.

Gambhir

நான் சதம் அடிக்க வேண்டும் என்று விளையாடியதால் அழுத்தத்தில் ஆட்டமிழந்து வெளியேறினேன். இல்லை என்றால் இலக்கை நோக்கி மட்டுமே என்னுடைய சிந்தனை இருந்திருக்கும் என்று தெரிவித்தார் அவரின் இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது மேலும் தோனிதான் ஆட்டமிழக்க காரணம் என்பதுபோல கூறிய அவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement