
இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருபவர் ரோஹித் சர்மா அதற்கு முன்னதாக 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் நன்றாக ஆடி இந்திய அணியில் இடம் பிடித்தார். அவருக்கு திறமை மிகவும் அதிகம். இதனால் இந்திய அணி அவருக்கு துவக்க காலத்தில் பல வாய்ப்புகளை கொடுத்தது. ஆனால் அந்த வாய்ப்புகள் அனைத்தும் அவருக்கு மிடில் ஆர்டரிலேயே வழங்கப்பட்டன.
அதனால் சிறப்பான வீரராக இருந்தாலும் ரோஹித் சர்மாவால் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை அவர் பெரிதாக எதுவும் சாதிக்கவில்லை. இருப்பினும் அவர் தொடர்ந்து இந்திய அணியில் விளையாடி வந்தார். இந்த வாய்ப்புகளுக்கு பின்னால் பெரும் பக்கபலமாக இருந்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிதான். இதுகுறித்து தற்போது கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.
அதில் கம்பீர் குறிப்பிட்டதாவது : ரோகித் சர்மா இன்று மிகப்பெரிய வீரராக இருக்கிறார். அவ்வாறு மாறுவதற்கு முழுக்க முழுக்க காரணம் தோனிதான். தேர்வு குழுவும் அணி நிர்வாகமும், கேப்டன் சொல்லும் வீரரை தேர்வு செய்யும். ஆனால் தோனி ரோஹித் சர்மாவிற்கு அவரது தொடக்க காலத்திலிருந்தே பக்கபலமாக இருந்தார். இதனால் அவருக்கு தான் ரோகித் சர்மாவின் பெருமையெல்லாம் சேரும்.
எல்லா வீரர்களுக்கும் தோனி இப்படி ஒரு ஆதரவைக் கொடுத்து விடவில்லை என்று கூறியுள்ளார் கௌதம் கம்பீர். தற்போது வரை ரோகித் சர்மா 9000 ரன்கள் விளாசியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 2773 ரன்களை குவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ரோஹித் சர்மாவை துவக்க வீரராக களமிறங்கி தோனிதான் அவரது வாழ்க்கையையே மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஹித் இந்திய அணிக்கு அறிமுகமானபோது சச்சின், சேவாக், கம்பீர், டிராவிட், யுவ்ராஜ் மற்றும் தோனி என இந்திய அணி பலமான பேட்டிங் ஆர்டரை கொண்டிருந்ததால் ரோஹித் சர்மாவிற்கு பெரும்பாலும் பின்வரிசையிலேயே வாய்ப்பு கிடைக்கும். அதன்பின்னர் இந்திய அணியில் இருந்து சீனியர் வீரர்கள் ஒவ்வொருவராக ஓய்வு பெற்று வெளியேற தோனி ரோஹித்தை ஓப்பனிங் விளையாட வைத்தார்.
அதன்பின்னர் ரோஹித் காட்டிய அதிரடி இதுவரை வேறலெவலில் உள்ளது. தற்போது உலகின் மிகச்சிறந்த தவிர்க்க முடியாத ஒருவீர்ராக ரோஹித் வளர்ந்து நிற்கிறார். அது மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் என்பது பெரிய விடயமாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போதுவரை 3 இரட்டை சதங்களை ரோஹித் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.