என்ன ஆனாலும் சி.எஸ்.கே அணியில் இவரை மட்டும் நீக்க கூடாது – கம்பீர் அறிவுரை

Gambhir
- Advertisement -

சென்னை சூப்பர் அணி அடுத்தடுத்த ஆட்டங்களில் தோல்வி அடைந்து கொண்டிருக்கிறது. தற்போது 6 போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி வெற்றி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் தான் காரணம் என்ற ஒரு பேச்சு இருந்துகொண்டுதான் இருக்கிறது.

CSK-1

- Advertisement -

அம்பத்தி ராயுடு, டுப்லஸ்ஸிஸ் ஆகிய இரண்டு வீரர்கள் மட்டுமே ஓரளவிற்கு நன்றாக ஆடி வருகின்றனர். கடந்த போட்டியில் ஷேன் வாட்சன் நன்றாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். குறிப்பாக ஷேன் வாட்சன் தொடர் முழுவதும் நன்றாக ஆடாமல் ஒரு சில குறிப்பிட்ட முக்கியமான போட்டிகளில் நன்றாக ஆடி அணிக்கு வெற்றியை தேடித்தந்தது அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் வீரர் ஆவார்.

இதன் காரணமாக அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பீர் கூறியிருக்கிறார். அவர் கூறுகையில்…ஷேன் வாட்சன் தொடர்ந்து ஆடும் லெவனில் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அவரை நீக்கி விடக்கூடாது. ஏனென்றால் சென்னை அணியின் பேட்டிங் ஆர்டர் மொத்தமாக முடிந்துவிட்டது.

கேதர் ஜாதவ் மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோர் சரியாக ஆடாத நிலையில் இளம் வீரரை கெய்க்வாட் மற்றும் முரளிவிஜய் இறங்குவது சரியாக இருக்காது. அதேபோல ஷேன் வாட்சன் நன்றாக ஆடாவிட்டாலும், அடுத்த ஐந்து போட்டிகளுக்கு கட்டாயம் அவருக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

watson

இப்போதைக்கு அவர் ரன் சேர்க்க தவறி விட்டாலும் அவர் நன்றாக ஆட்டிவிட்டால், அதன் பின்னர் தொடர்ந்து நன்றாக ஆடுவார். வாட்சனுக்கு நிச்சயம் சப்போர்ட் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார் கௌதம் காம்பீர். கம்பீர் தெரிவித்துள்ளபடி கடைசி 2 ஆட்டங்களில் அவரது ஆட்டம் அற்புதமாக அமைந்தது.

Advertisement