இந்த வருஷமும் சி.எஸ்.கே அணிக்கு அதே நிலைதான். ரொம்ப கஷ்டம்ங்க – நேரடியாக கூறிய கம்பீர்

Gambhir
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் மிகப்பெரிய டி20 கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தற்போது 13 சீசன் களை கடந்து 14வது சீசனுக்கு வந்துள்ளது. இந்த ஐபிஎல் தொடரானது ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை இந்தியாவிலேயே நடைபெற உள்ளது. உலகில் உள்ள ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளதால் ரசிகர்களிடையே இந்தத்தொடர் குறித்த எதிர்பார்த்து அதிகரித்துள்ளது.

ipl

- Advertisement -

இந்த தொடருக்காக தற்போது அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் ? எந்த வீரர் நன்றாக விளையாடுவார் ? எந்த பவுலர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவார் என அனைவரும் தங்களது கருத்துக்களை வெளியிட்ட வண்ணம் உள்ளனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : கடந்த தொடரில் செயல்பட்டதை போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறையும் மோசமாக செயல்படும் என நினைக்கிறேன். மேலும் இந்த தொடரிலும் வெற்றி பெறுவதற்கு அவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

இந்த முறையும் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது சற்று கடினம் தான் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த வருடம் ஐபிஎல் ஏலம் தான் சென்னை அணிக்கு சிறந்த ஏலம் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

cskvssrh

இந்த வருடம்தான் சென்னை அணி தேவையான வீரர்களை தேவையான தொகை கொடுத்து வாங்கியிருக்கிறது. பெரும் போராட்டத்திற்கு பிறகு மேக்ஸ்வெல்லை வாங்காமல் விட்ட அவர்கள் அவருக்கு பதிலாக மொயின் அலி மற்றும் கிருஷ்ணாப்பா கவுதம் ஆகியோர் ஆகிய வரை ஏலம் எடுத்துள்ளது பாராட்டப்படவேண்டிய ஒன்று என கம்பீர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement