ரசலின் காட்டடியை இந்த ஒரு பவுலரால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் – கம்பீர் ஓபன் டாக்

Gambhir

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ipl

இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல முன்னணி வீரர்களும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனான கம்பீர் இந்த தொடரில் அதிரடிவீரரான ரசலுக்கு அச்சுறுத்தலை அளிக்கக்கூடிய ஒரு பந்துவீச்சாளர் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ரசலை திணறடிக்க 2 – 3 பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் தொடர்களில் இருக்கின்றனர். ஆனால் அதில் ஒருவர் மட்டுமே அவருக்கு எதிராக சிறப்பாக பந்து வீச முடியும் அவர் யார் என்றால் மும்பை அணியை சேர்ந்த ஜஸ்பிரித் பும்ரா தான். நிச்சயம் பும்ராவால் எந்த ஒரு பேட்ஸ்மேனுக்கும் எதிராக பந்துவீசி அவர்களை ஆட்டம் இழக்கச் செய்ய முடியும் அந்த வகையில் பேட்டிங்கில் மிகுந்த அதிரடியாக ஆடும் ரசலுக்கு சிம்ம சொப்பனமாக இந்த ஆண்டு பும்ரா திகழ்வார் என்று கூறியுள்ளார்.

Russell

மேலும் ரசல் குறித்து இந்த ஆண்டு ஒரு நீண்ட விவாதம் நடந்து வருகிறது ஏற்கனவே கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளர் டேவிட் ஹஸ்ஸி மூன்றாம் இடத்தில் இறங்கினால் அவர் இரட்டை சதம் அடிப்பார் என்று கூறியிருந்தார். இந்நிலையில் கம்பீர் ரசல் குறித்து பேசியுள்ளது ரசிகர்களிடையே பெறும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மென் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் இரண்டிலுமே சிறப்பான ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Russell

மேலும் துவக்கத்தில் பார்ட்னர்ஷிப் சரியாக அமையும் பொழுது சீக்கிரமே முன்கூட்டியே ரசலை இறக்கினால் அவரால் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு 14 போட்டிகளில் விளையாடிய ரசல் 510 ரன்களை குவித்தது மட்டுமின்றி ஒவ்வொரு போட்டியிலும் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் விளாசியது குறிப்பிடத்தக்கது.