பும்ராவின் பந்துவீச்சை அடித்து நொறுக்கும் அசுரபலம் இவரிடம் மட்டுமே உள்ளது – கம்பீர் புகழாரம்

Gambhir
- Advertisement -

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் தொடரில் இதுவரை கோப்பையை வெல்லாத அணியாக இருந்து வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி தோல்வியடைந்த பெங்களூரு அணி கடந்த சீசனிலும் டைட்டிலை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டு நான்காம் இடம் பிடித்து வெளியேறியது. இந்நிலையில் தற்போது இந்த ஆண்டு பலமாக மாறியுள்ள பெங்களூர் அணி முதல்பாதியில் சிறப்பாக துவங்கியுள்ளது.

- Advertisement -

இதுவரை நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள சீசனில் 7 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்ற அவர்கள் புள்ளிபட்டியலில் 3வது இடம் வகிக்கின்றனர். இந்நிலையில் தற்போதைய 14 சீசனுக்கான இரண்டாவது பாதி தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரில் ஒட்டுமொத்தமாக வித்தியாசமான அணியாக மாறியுள்ள பெங்களூரு அணி தற்போது பலமாகக் காணப்படுகிறது.

இந்நிலையில் இந்த இரண்டாவது பாதியில் விராட் கோலியின் தலைமையிலான பெங்களூரு அணி சிறப்பாக செயல்படும் என்றும் அவர்கள் கோப்பையை நோக்கி செல்வார்கள் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரரும், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

RCB

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணியில் டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் போன்ற பெரிய வீரர்கள் உள்ளனர். அது அந்த அணிக்கு மிகுந்த பலமாக அமையும். அதிலும் குறிப்பாக ஏபிடி இருப்பது மற்ற அணிகளுக்கு சற்று பயத்தை உண்டாக்கும். ஏனெனில் ஜஸ்பிரித் பும்ரா போன்ற மிகப் பெரிய பவுலரை கூட அவரால் எளிதாக அடித்து ஆட முடியும். என்னைப்பொருத்தவரை பும்ராவை அடித்து நொறுக்க கூடிய வீரர் என்றால் அது ஏபிடி மட்டும்தான் என்று கூறியுள்ளார்.

abd 1

மேலும் கடந்த சில சீசன்களாகவே பந்துவீச்சாளர்கள் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த பெங்களூர் அணி தற்போது சிறப்பான பந்து வீச்சாளர்களையும் தங்கள் வசம் வைத்துள்ளதால் கோப்பையை வெல்ல அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு உள்ளது என கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement