முதல் போட்டியில் ஜெயிக்கப்போவது சென்னையா ? மும்பையா ? – நேரடி பதிலை அளித்த கம்பீர்

CskvsMi

பல்வேறு இன்னல்களை கடந்து இந்த வருட ஐபிஎல் தொடர் பதிமூன்றாவது சீசனாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று உறுதி ஆகி உள்ளது. எனவே இந்தத்தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த தொடரை காண அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

csk-vs-mi

வரும் சனிக்கிழமை துவங்க உள்ள இந்த தொடர் குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் நிபுணர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரும் தங்களது கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசுவார்கள் ? எந்த பேட்ஸ்மேன்களை அதிக ரன்களை குவிப்பார் ?எந்த அணி வெற்றி பெறும் ? போன்ற பல்வேறு கருத்துக்களை அவர்கள் வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சனிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கருத்தினை தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை முதல் போட்டியில் சென்னை அணியை மும்பை அணி எளிதில் சமாளித்து விடும். ஏனெனில் பும்ரா, போல்ட் ஆகியோர் சென்னை பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வார்கள்.

Bumrah-1

பும்ரா மற்றும் போல்ட் ஆகியோர் இணைந்து பந்து வீசுவதை காண ஆவலாக உள்ளேன். இவர்கள் இருவரும் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள். அவர்கள் தனித்துவம் மும்பை அணிக்கு பெரிதும் கைகொடுக்கும். மேலும் ரெய்னாவின் இழப்பு சென்னைக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ரெய்னா இல்லாத இடத்தில் வாட்சன் களம் இறங்க அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக மிடில் ஆர்டரில் சென்னை அணி எப்படி சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -

என்னுடைய கணிப்பின்படி மும்பை அணி முதல் போட்டியில் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஏனெனில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் மும்பை அணி சிறப்பாக உள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலம் என்று கம்பீர் கூறியுள்ளார். இவரது இந்த கருத்தின் மூலம் மும்பை அணியே முதல் போட்டியில் வெற்றி பெறும் என்று அவர் கூற வருவது நமக்கு தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.