2027 வேர்ல்டுகப் ஆடனுமா? அப்போ பர்ஸ்ட் இதை பண்ணுங்க.. ரோஹித்துக்கு செக் வைத்த கம்பீர் – விவரம் இதோ

Gambhir and Rohit
- Advertisement -

கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய கையோடு இந்திய டி20 அணியிலிருந்து கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்திருந்தார். அதனை தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்றிருந்த ரோகித் சர்மா அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் கேப்டனாக பயணிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற அவர் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்திருந்தார்.

ரோஹித் சர்மாவுக்கு செக் வைத்த கவுதம் கம்பீர் :

இதன் காரணமாக 2027 ஒருநாள் உலக கோப்பை வரை இந்திய அணியின் கேப்டனாக இருந்து அந்த உலக கோப்பையையும் கைப்பற்றிய பின்னரே சர்வதேச போட்டியிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கிறது. அதற்குள் ரோகித் சர்மா 40 வயதை எட்டி விடுவார்.

- Advertisement -

இந்த இரு காரணங்களால் அவரை தனிப்பட்ட முறையில் ஓய்வு பெற நிர்வாகம் அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் கௌதம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரும் ரோகித் சர்மாவிற்கு செக் வைத்துள்ளார்.

அதாவது எதிர்வரும் 2027 ஒருநாள் உலக கோப்பையில் ரோகித் சர்மா விளையாட வேண்டுமெனில் தொடர்ச்சியாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் அதன் காரணமாக இந்திய ஏ அணியில் இணைந்து அவரை விளையாட சொல்லி இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் தற்போது ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பதனால் அவரை ஆஸ்திரேலிய தொடரில் இணைக்கலாமா? வேண்டாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக ஆஸ்திரேலிய தொடருக்கு முன்னதாக இந்திய ஏ அணியுடன் இணைந்து ரோகித் சர்மா ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட வேண்டும் என்ற கட்டளை இடப்பட்டுள்ளது. அதனால் இந்திய ஏ அணியுடன் இணைந்து விளையாட வேண்டிய கட்டாயத்திற்கு ரோஹித் சர்மா தள்ளப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : எனக்கு ஓட்டு போடுங்க.. ஆர்சிபி அணியால் சின்னசாமிக்கு ஏற்பட்ட கறையை துடைப்பேன்.. வெங்கடேஷ் பிரசாத் உறுதி

அந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே ஆஸ்திரேலிய தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது. இந்திய அணிக்கு கடந்த பல ஆண்டுகளாக கேப்டனாக திகழ்ந்துவரும் அவரை இந்திய ஏ அணியுடன் பயணிக்க வைப்பதன் மூலம் கௌதம் கம்பீர் அவருக்கு மன ரீதியாக செக் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement