இந்தாண்டு சி.எஸ்.கே அணி ஏலத்தில் இந்த வீரர்களை எடுத்தால் போதும் – கம்பீர் கணிப்பு

Gambhir
- Advertisement -

ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் மே மாதத்தில் நடைபெறும் என்று கூறப்பட்டு வருகிறது. இதற்கான மினி ஏலம் வருகின்ற 18ஆம் தேதி சென்னையில் நடைபெறும். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்தெந்த வீரரைத் ஏலத்தில் எடுக்கும் என்பதை இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கணித்து கூறியுள்ளார். பத்திரிகை ஒன்றுக்குப் சமீபத்தில் பேட்டியளித்த அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல முன்னணி வீரர்கள் ஏற்கெனவே உள்ளனர். அவர்களை தக்க வைத்துக்கொண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து துவக்க வீரர் ரோபின் உத்தப்பாவை டிரேடிங் முறையில் வாங்கி, ஏலத்தை எளிமைப்படுத்தியுள்ளனர் என்றார்.

- Advertisement -

கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு அணி சிறப்பான முறையில் செயல்படும் என்று நம்புகிறேன். சுரேஷ் ரெய்னா அணிக்கு திரும்பியுள்ளார். துவக்க வீரர் ரோபின் உத்தப்பாவும் புது வரவாக வந்துள்ளார். இதனால், பேட்டிங்கை பொறுத்துவரை அணி பலம் வாய்ந்த அணியாக உள்ளது”.

“ரெய்னா, உத்தப்பா, அம்பத்தி ராயுடு, மகேந்திரசிங் தோனி இதற்குமேல் ஒரு அணிக்கு என்ன வேண்டும். ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ நீண்ட காலமாக விளையாடி வருபவர்கள். ஹர்பஜன் சிங்கிற்கு பதிலாக ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதமை அணியில் சேர்த்தால் நன்றாக இருக்கும்.

Neesham

பிராவோ அனைத்து போட்டிகளிலும் களமிறங்க முடியுமா? என்பதை மட்டும் யோசித்துப் பார்க்க வேண்டும். வயது மூப்பு காரணமாக ஓய்வு கொடுக்கும் நிலைமை ஏற்படலாம். இதனால், கிறிஸ் மோரிஸ் அல்லது ஜிம்மி நீஷம் போன்ற ஒருவரை அணியில் இணைக்க வேண்டும்.

Umesh

அதேபோல், அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவையும் சேர்த்தால் நன்றாக இருக்கும் என கருதுகிறேன். இப்படி நடந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வலிமை மிக்க அணியாக இருக்கும் என்று கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Advertisement