
வி.வி.எஸ் லட்சுமணன் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் 5 ஆண்டுகள் இணைந்து இந்திய அணிக்காக விளையாடியவர்கள். இதில் வி.வி.எஸ் லட்சுமணன் 2011 ஆம் ஆண்டும், கௌதம் கம்பீர் 2018 ஆம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர். லட்சுமணன் இந்திய அணியின் பெரும் தூணாக இருந்து போது இளம் வீரராக அணியில் வந்து களம் இறங்கியவர் கவுதம் கம்பீர்.
இருவருக்கும் இடையே எப்போதும் ஒரு பரஸ்பர நட்பு இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் கௌதம் கம்பீர் குறித்து லட்சுமணன் நேற்று புகழ்ந்து பேசி இருந்தார். அதாவது…
கௌதம் கம்பீர் கிரிக்கெட்டில் மிகப் பெரிய ஆர்வம் கொண்டவர். கிரிக்கெட் மீது தீரா பிடிப்புடன் இருந்தவர் .களத்தில் உள்ள சவால்களை கண்டு என்றுமே அவர் அஞ்சுவதில்லை.
பந்து வீச்சுக்கு சாதகமான ஆடு களங்களிலும் கூட அசத்தியிருக்கிறார். மேலும், சக வீரர்களுக்காக நிற்பதில் அவருக்கு நிகர் அவரே. எப்போதும் பின் வாங்காத குணம் உடையவர் என்று பாராட்டி இருந்தார் விவிஎஸ் லட்சுமனன். இதற்கு பதிலளித்த கவுதம் கம்பீர் : தனது ட்விட்டர் பக்கத்தில் உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.
உங்களுடன் செலவிட்ட ஒவ்வொரு தருணமும் எனக்கு மிகப்பெரிய படிப்பினையாகும். என் ஓய்வு அறை முழுவதும் ரோல் மாடல்களாக நிரம்பியிருந்தனர். சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமணன், ராகுல் டிராவிட் விரேந்தர் சேவாக் என பல ஜாம்பவான்கள் இருந்தனர்.
ஆனால் உங்களை விட மிகப் பெரிய ரோல் மாடல் யாரும் இல்லை.
உங்களுக்கு ஒரு விமரிசையான பிரியாவிடை அளிக்க விரும்புகிறேன். ஆனால், ஆடுகளத்தில் நான் ஷார்ட் லெக் திசையில் நின்று உயிரை பணயம் வைத்து கேட்ச் பிடித்துக்கொண்டிருந்த போது நீங்கள் மட்டும் பாதுகாப்பாக ஸ்லிப்பில் சென்று கொண்டிருந்தீர்கள் என்று நகைச்சுவை உணர்வுடன் ட்வீட் செய்திருந்தார் விவிஎஸ் லட்சுமனன்.