ரபாடா, ஆர்ச்சர், ரஷீத் கான் இவர்களை விட இந்திய பவுலரான இவரே பெஸ்ட் – கம்பீர் பாராட்டு

Gambhir

இந்த வருட ஐபிஎல் தொடர் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது இரு வாரங்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த தொடரில் சிறப்பாக பந்து வீசும் பவுலர்களுக்கு பஞ்சம் இருக்கிறது. தற்போதைக்கு சிறப்பாக பந்துவீசும் பவுலர்கள் 5 பேர் கூட இந்த தொடரில் இல்லை எனக்கூறலாம்.

dc

அந்த அளவிற்கு சர்வதேச பவுலர்கள் கூட பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்கி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில போட்டிகளில் உள்ளூர் வீரர்கள் பெரிய அளவில் பேசப்படுகின்றனர். அந்த அளவிற்கு உள்ளூர் வீரர்களின் திறமை வெளிப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் கலக்கலாக பவுலிங் செய்யும் பந்துவீச்சாளர்கள் கூட இந்த ஐபிஎல் தொடரில் பெரிதும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

ஆனால் இவர்களில் ஒரு சிலர் சிறப்பாக பந்து வீசி வருகின்றனர். அந்த வகையில் டெல்லி அணியில் ரபாடா, ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர், சன் ரைசர்ஸ் அணியின் ரசித் கான் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்திய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் சற்று தடுமாற்றமே காண்கின்றனர். ஏனெனில் அவர்கள் ஓவரில் அதிக ரன்கள் செல்கிறது. குறிப்பாக உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா போன்ற பந்துவீச்சாளர்கள் கூட அதிக ரன்களை விட்டுக் கொடுக்கின்றனர்.

rabada

இந்நிலையில் சத்தமின்றி இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் 5 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமின்றி ஒவ்வொரு மேட்சுக்கும் 18 ரன்கள் மட்டுமே அவர் விட்டுக் கொடுக்கிறார். இந்நிலையில் அவரை பாராட்டி பேசிய கௌதம் கம்பீர் கூறுகையில் : நாம் அனைவரும் ரஷித் கான், ரபாடா, ஆர்ச்சர் என வெளிநாட்டு பவுலர்கள் குறித்து தான் அதிகம் பேசுகிறோம்.

- Advertisement -

chahal 1

ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளரான சாஹல் குறித்து யாரும் பேசுவது கிடையாது. அவரைக் குறித்து அதிகமாக நாம் பேச வேண்டும். ஏனெனில் பந்துவீச்சில் ஒரு புத்திசாலி தான் அவரது பௌலிங் திறமையே இந்த நடப்பு ஐபிஎல் தொடரில் கண்டு கொண்டிருக்கிறோம் என்று அவரை புகழ்ந்து பாராட்டிப் பேசியது குறிப்பிடத்தக்கது.