- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தோல்வி.. இந்திய வீரர்களுக்கு புதிய கட்டளை விதித்த கம்பீர் – விவரம் இதோ

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரினை ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் இழந்துள்ளது. இதன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்திய அணி தவறவிட்டது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய வீரர்களுக்கு கட்டளை விதித்த கம்பீர் :

ஏற்கனவே நடைபெற்று முடிந்த நான்கு போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகித்திருந்த வேலையில் சிட்னி டெஸ்ட் போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் டிரா செய்ய வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்தது. அந்த வகையில் இந்திய அணியிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

- Advertisement -

ஆனாலும் நடைபெற்று முடிந்த இந்த சிட்னி போட்டியில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணிக்கு எதிராக அங்கு நடைபெற்ற டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றி இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணி இந்த தொடரில் அடைந்த தோல்வி தனிப்பட்ட முறையில் இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீரை பெரிய அழுத்தத்தில் தள்ளியுள்ளது.

மேலும் இந்த தொடரின் தோல்விக்கு பிறகு கம்பீர் சில கட்டளைகளையும் இந்திய வீரர்களுக்கு விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கௌதம் கம்பீர் கூறுகையில் : அழுத்தம் நிறைந்த சூழல்களில் இந்திய அணி வீரர்கள் திணறிவிட்டனர். மெல்போர்ன் டெஸ்ட்டை டிரா செய்ய வாய்ப்பு இருந்தும் அழுத்தத்தால் இந்திய அணி அந்த போட்டியில் தோல்வியை சந்தித்தது. அதேபோன்று சிட்னி போட்டியிலும் தொடரை டிரா செய்ய வாய்ப்பு இருந்தும் நாங்கள் தவறவிட்டது ஏமாற்றம் அளிப்பதாக வெளிப்படையாகவே அறிவித்திருந்தார்.

- Advertisement -

அதுமட்டும் இன்றி இந்த தொடரில் விளையாடிய வீரர்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும் என்றும் அப்படி விளையாடவில்லை என்றால் சரியான வீரர்கள் அணிக்கு கிடைக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளாராம். அது தவிர்த்து முன்னணி வீரர்கள் யார் பிட்னஸ் உடன் இருந்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் இனி விளையாட வேண்டும் என்றும் கட்டளை விதித்துள்ளார். இதற்கு காரணம் யாதெனில் :

இதையும் படிங்க : மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து விளையாட என்ன காரணம்? – விவரம் இதோ

விராட் கோலி ரோஹித் சர்மா போன்ற அனுபவ வீரர்கள் கூட இந்த தொடரில் பேட்டிங்கில் பெரிய அளவில் தடுமாற்றத்தை சந்தித்தனர். அதிலும் குறிப்பாக விராட் கோலி ஒரே மாதிரியாக ஆட்டமிழந்தது அனைவரது மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக நிச்சயம் ரஞ்சி கோப்பையில் அனுபவ வீரர்கள் விளையாடும் பட்சத்தில் டெக்னிக்கலாக அவர்களது தவறுகளை திருத்திக் கொள்ள முடியும் என்பதனாலேயே அவர் இந்த அதிரடி கட்டளையை விதித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -