இனிமே யாரும் ஷ்ரேயாஸ் ஐயரை ஒருநாள் அணியிலிருந்து நீக்க முடியாது – கம்பீர் எடுத்துள்ள புதிய முடிவு

Shreyas-Iyer
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று கொழும்பு நகரில் மதியம் 2:30 மணிக்கு துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல் ராகுல் போன்ற வீரர்கள் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி உள்ளதால் இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தை உறுதி செய்யும் விதமாக இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் செய்துள்ள ஒரு ஏற்பாடு தற்போது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

ஏற்கனவே பேட்ஸ்மேன்கள் அனைவரும் பந்துவீச வேண்டும் என்று கூறி அவர்களுக்கு தனியாக பயிற்சி ஏற்பாடு செய்து வரும் கம்பீர் தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் விடயத்திலும் ஒரு முக்கிய முடிவை கையில் எடுத்துள்ளார்.

அதாவது நடைபெற்று முடிந்த இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரின் போது சூரியகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் பந்து வீசியது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்திருந்தது. அதேபோன்று தற்போது ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் ஷ்ரேயாஸ் ஐயரும் பந்துவீச இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் கௌதம் கம்பீர் ஷ்ரேயாஸ் ஐயர் முழுநேர பேட்ஸ்மேனாக மட்டும் இருக்கக்கூடாது என்பதற்காக பகுதி நேரத்தில் சுழற்பந்து வீசுமாறு அறிவுரை கூறியதோடு அவருக்கு பயிற்சியும் வழங்கி உள்ளார். இதன் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் பந்துவீசினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதேபோன்று ஒருவேளை அவரால் சில ஓவர்கள் நன்றாக பந்துவீச முடியும் பட்சத்தில் நிச்சயம் அவரை ஒருநாள் அணையில் இருந்து வெளியேற்ற முடியாது என்பதால் அந்த பயிற்சியை கம்பீர் வழங்கியுள்ளார்.

இதையும் படிங்க : பவருக்கு பஞ்சமில்லை.. இதை செஞ்சா ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தலாம்.. இலங்கைக்கு ஜெயசூர்யா நம்பிக்கை

ஏற்கனவே கொல்கத்தா அணியின் கேப்டனாக கோப்பையை வென்ற அவர் மீது கம்பீர் நிறைய நம்பிக்கை வைத்துள்ளதால் நிச்சயம் ஒருநாள் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடத்தை யாராலும் பறிக்க முடியாது என்று கூறப்படுகிறது.

Advertisement