2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பையை ஜெயிக்கனும்னா இதை பண்ணனும் – கம்பீர் அறிவுரை

Gambhir
- Advertisement -

இந்திய அணியானது கடந்த 2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பையை தோனியின் தலைமையில் கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து எந்தவொரு ஐ.சி.சி தொடரையும் கைப்பற்றவில்லை. அண்மையில் நடைபெற்று முடிந்த அடுத்தடுத்த 2 டி20 உலககோப்பையை கூட இந்திய அணி தவறவிட்டது. இப்படி இந்திய அணி தொடர்ச்சியாக ஐ.சி.சி கோப்பைகளை தவறவிட்டு வருவது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் 50 ஓவர் உலககோப்பை நடைபெறவுள்ளது. இந்த தொடரை எப்படியாவது கைப்பற்றியே ஆக வேண்டும் என்கிற முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது. அதேபோன்று இந்த உலகக்கோப்பையுடன் சில சீனியர் வீரர்களின் கரியரும் முடிவுக்கு வரும் என்பதனால் இந்த உலககோப்பை மீதான எதிர்பார்த்து அனைவரது மத்தியிலும் உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பையை இந்திய அணி ஜெயிக்க வேண்டும் எனில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் இனிவரும் ஒருநாள் தொடர்களில் ஓய்வில்லாமல் விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலியோ, ரோஹித் சர்மாவோ யாராக இருந்தாலும் 50 ஓவர் உலககோப்பை வேண்டும் என்றால் இனிவரும் ஒருநாள் தொடர்களில் ஓய்வில்லாமல் விளையாட வேண்டும். அப்போது தான் ஒரு நிலையான அணி உலககோப்பையில் விளையாட தகுதியாக இருக்கும். மேலும் அடுத்த ஒரு வருடத்திற்கு இந்திய அணியில் பெரிய மாற்றம் இருக்கக்கூடாது என்று நினைக்கிறன்.

- Advertisement -

ஏனெனில் கடந்த 2 வருடங்களாக இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டதாலே இந்திய அணி அடுத்தடுத்த கோப்பைகளை தவறவிட்டது. எனவே இனிவரும் தொடர்களில் முதன்மை அணியை சேர்ந்த வீரர்களை ஒருங்கிணைத்து தொடர்ச்சியாக விளையாட வைத்து அணியை மேலும் பலப்படுத்தி தயாராக்க வேண்டும் என்று கம்பீர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவை பாலோ பண்ணி அடுத்த வருசம் மிஞ்சி காட்டுகிறோம் – புதிய பாகிஸ்தான் செலக்டர் அஃப்ரிடி அதிரடி அறிவிப்பு

ஏற்கனவே தொடர்ச்சியாக ஐ.சி.சி கோப்பைகளை தவறவிட்டு வரும் இந்திய அணிக்கு எதிர்வரும் இந்த 2023-ஆம் ஆண்டு 50 ஓவர் உலககோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற மிகப்பெரிய வாய்ப்பாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement