தயவு செய்து இவரை சீண்டாதீங்க. உங்க பேர நீங்களே கெடுத்துகாதீங்க – கம்பீருக்கு நோஸ்கட் கொடுத்த ரசிகர்கள்

Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2011ம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி மஹேந்திர சிங் தோனி இலங்கை அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் சிக்சரை பறக்க விட்டு இந்திய அணிக்கு 28 ஆண்டுகளுக்குப் பின்னர் உலக கோப்பை தொடரை கைப்பற்றி கொடுத்தார். மும்பை மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவும் இலங்கை அணியும் மோதின.

yuvidhoni

- Advertisement -

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த தினத்தை நேற்று முன்தினம் சமூகவலைதளத்தில் இந்திய ரசிகர்கள் பெரிதும் கொண்டாடினர் கொண்டாட்டத்திற்கு இடையே வழக்கம்போல் சில சர்ச்சைகளும் இருந்தது. இந்த சர்ச்சைகளுக்கு முக்கிய மூலக்காரணம் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் தான்.

பிரபல கிரிக்கெட் இணையதளமான இஎஸ்பிஎன் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தோனி சிக்ஸர் அடித்த புகைப்படத்தை பதிவு செய்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். இதனை பார்த்த கௌதம் கம்பீர் தனக்கும் பாராட்டுகள் வேண்டும் என்பதை போல அதனை வைத்து ஒரு ட்வீட் செய்திருந்தார்.

Gambhir-1

இந்திய அணியின் அனைத்து வீரர்களும், அனைவரும் சேர்ந்துதான் கோப்பையை வென்றோம். ஆனால் தோனி எடுத்த சிக்சரை மட்டும் வைத்து பேசாதீர்கள் என்று மறைமுகமாக இந்த தோனியை சாடினார். இதனை பார்த்து கடுப்பான ரசிகர்கள் எப்போது பார்த்தாலும் தோனியை சீண்டிக்கொண்டே தான் இருப்பீர்களா? உங்களுக்கு வேறு வேலை இல்லையா என்பது போல் அவரை கலாய்க்கத் தொடங்கினர்.

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றிபெற கௌதம் கம்பீரின் பங்களிப்பு அளப்பரியது தான். அவர் 97 ரன்கள் எடுத்து கோப்பையை வெல்ல ஒரு காரணமாகவும் இருந்தார். இருந்தாலும் இது போன்ற சர்ச்சைகள் வரும்போதெல்லாம் கௌதம் கம்பீர் இதே வேலையை வைத்துக் கொண்டிருப்பது வாடிக்கையாகிவிட்டது.

Gambhir

இன்றளவும் கடைசியாக தோனி அடித்த சிக்சர் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது. இது அவருக்கு பிடிக்கவில்லை என்பதால் வித்தியாசமாக மறைமுகமாக ஒரு சர்ச்சையை உருவாக்கியுள்ளார் கவுதம் கம்பீர் என பலரும் பலவாறு தங்களது டுவிட்டர் பக்கத்தில் பேசி வருகின்றனர்.

Advertisement