நான் விளையாடிய வரைக்கும் என்னை பொறுத்தவரை இவர் தான் சிறந்த கேப்டன் – கம்பீர் பேட்டி

Gambhir
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர்களான கௌதம் கம்பீர் 2003 ஆம் ஆண்டு சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணியில் இடம் பிடித்தார். அதன் பின்னர் தனது சிறப்பான ஆட்டத்தால் தொடர்ந்து அணியில் இடம் பிடித்து வந்த கம்பீர் இந்திய அணி வெற்றி பெற்ற உலகக் கோப்பை தொடர்களான 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 50 ஓவர் உலகக் கோப்பை ஆகிய இரண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் தனது முக்கியமான ஆட்டத்தினால் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gambhir-1

- Advertisement -

இப்படி வரலாற்று சாதனை மிக முக்கிய போட்டிகளில் சிறப்பாக ஆடிய கம்பீர் இந்திய அணியில் பல்வேறு கேப்டன்களுக்கு கீழ் விளையாடி வருகிறார். குறிப்பாக அவர் அறிமுகமானபோது கங்குலி கேப்டனாக இருந்தார். அதன்பின்னர் டிராவிட், கும்ப்ளே, தோனி என பலரது கேப்டன்சியில் கம்பீர் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு தான் விளையாடிய காலத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்து பேட்டியளித்த கம்பீர் தனக்கு மிகவும் பிடித்த கேப்டன் குறித்தும் அந்த பேட்டியில் கருத்தினை முன்வைத்துள்ளார். அதில் அது குறித்து அவர் கூறியதாவது : சந்தேகமே இல்லை சாதனைகளின் அடிப்படையிலும் புள்ளி விவரத்தின் அடிப்படையில் பார்த்தால் தோனி எப்போதும் கேப்டன்கள் வரிசையில் முன்னிலையில் இருக்கிறார்.

Kumble

ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் தோனியை விட சிறந்த கேப்டனாக கும்ப்ளே தெரிகிறார். ஏனெனில் கும்ப்ளே ஏற்றுக்கொண்ட இலக்கு மிகப்பெரியது. அவரது கேப்டன்சியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தது. அதேபோன்று கங்குலி குறித்து அவர் கூறுகையில் : கேப்டனாக கங்குலி சிறப்பாக பணியாற்றினார்.

- Advertisement -

இந்திய அணியை வேறு பரிமாணத்துக்கு கொண்டு வர அவரது கேப்டன்ஷிப் உதவியது. பயமின்றி விளையாடிய போட்டிகள் மற்றும் அயல்நாட்டு மண்ணில் தொடரை கைப்பற்றியது என கங்குலி தலைமையில் இந்திய அணி வீரநடை போட அவரும் சிறந்த கேப்டனாக இருந்தார். ஆனால் என்னை பொறுத்தவரை கும்ப்ளே ஒரு நீண்டகால கேப்டனாக இருந்து இருக்கவேண்டிய ஒரு நபர். ஆனால் அவரால் நீண்டகாலம் இந்திய அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்க முடியவில்லை.

Gambhir

நான் அவரது தலைமையில் ஒரு 6 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளேன் .அவரது கேப்டன்சி நுணுக்கம் குறித்து என்னால் நன்கு உணர முடிகிறது. மேலும் அவர் வேறு மாதிரி அவரது தலைமையில் இந்திய அணி சிறப்பாகவே செயல்பட்டது. என்னை பொருத்தவரை அவர் வழிநடத்தும் விதம் அருமையாக இருந்ததால் அவரே நான் விளையாடிய காலத்தில் சிறந்த கேப்டன் என்று கூறுவேன் என்று இவ்வாறு கம்பீர் பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement