இவர் மட்டும் என் அணியில் ஆகியிருந்தால் இன்னும் 2 ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி இருப்பேன் – கம்பீர் வெளிப்படை

Gambhir
- Advertisement -

இந்தியாவில் 2008 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடர் நடைபெற்றுவருகிறது. தற்போதுவரை 12 ஐபிஎல் தொடர்களில் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற இருந்த ஐ.பி.எல் தொடர் கொரோன வைரஸ் காரணமாக தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Gambhir 1

- Advertisement -

இந்த 12 வருட ஐ.பி.எல் வரலாற்றில் கொல்கத்தா அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு கோப்பையை கைப்பற்றியது. இதில் அந்த அணிக்கு கேப்டனாக இருந்தவர் கௌதம் கம்பீர். 2012 ஆம் ஆண்டு சென்னை அணியையும் 2014ஆம் ஆண்டு பஞ்சாப் அணியையும் வீழ்த்தி கோப்பையை வென்றது கொல்கத்தா அணி. பின்னர் 2017ம் ஆண்டு வரை கொல்கத்தா அணிக்காக ஆடிய கௌதம் கம்பீர் பின்னர் தனது சொந்த ஊரான டெல்லி அணிக்கு மாறினார்.

அதன்பின் டெல்லி அணியில் தன்னால் சிறப்பாக விளையாட முடிவில்லை என்றும் கேப்டன்சியிலும் தடுமாறியதாலும் டெல்லி அணி அணி தொடர் தோல்விகளை சந்தித்தது. அதன்காரணமாக திடீரென அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதுமட்டுமின்றி அவருக்கு பதிலாக ப்ரித்வி ஷாவை களமிறங்கினர். பிறகு ஐ.பி.எல் போட்டிகளில் இருந்தும் அவர் விலகியது குறிப்பிடத்தக்கது.

Russell

இந்நிலையில் கொல்கத்தா அணியின் அதிரடி வீரர் ஆன்ட்ரு ரஸல் மட்டும் தான் இன்னும் சில காலம் ஆடி இருந்தால் கண்டிப்பாக இன்னும் இரண்டு கோப்பைகளை கொல்கத்தா அணிக்கு பெற்றுக் கொடுத்து இருப்பேன் என்று கூறியுள்ளார். கௌதம் கம்பீர் இது குறித்து பேசிய அவர் கூறியதாவது…

- Advertisement -

நான் கொல்கத்தா அணியில் ஆகிய 7 ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டேன். அப்போதே ரசல் என் அணியில் ஆடியிருந்தால் இன்னும் இரண்டு கோப்பைகளை கொல்கத்தா அணி வென்றிருக்கும். அதிரடி வீரரான அவர் கடந்த பல வருடங்களாக காட்டு அடி அடித்து வருகிறார். 200 ரன்கள் இலக்கு போதாது என்ற அளவிற்கு எதிரணிகளின் மனநிலையை மாற்றி விட்டார். பேட்டிங்கில் மட்டுமல்ல பந்துவீச்சிலும் பீல்டிங்கிலும் அசைத்த்க் கூடியவர் என்று பாராட்டியுள்ளார் கௌதம் கம்பீர்.

Russell

ரசல் உண்மையில் அந்த அளவிற்கு அதிரடி ஆட்டக்காரர் தான். அவரது அதிரடியில் இன்றுவரை பல் அணிகள் அவருக்கு எதிராக பந்துவீச திணறி வருவதை நாம் பார்த்து வருகிறோம். மேலும் போட்டிகளில் காட்டடி அடிக்கும் அவரின் முரட்டு சிக்ஸர்களையும் நாம் கண்கூடாக பார்த்து குறிப்பிடத்தக்கது.

Advertisement