2014 க்கு பிறகு காணாமல் போவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவரே இன்று உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் – கம்பீர் மற்றும் லஷ்மணன் புகழாரம்

Laxman
- Advertisement -

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நடத்திய கிரிக்கெட் நிகழ்ச்சியில் ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் விவிஎஸ் லக்ஷ்மன் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் குறித்த பல சம்பவங்கள் குறித்து விவாதித்த அவர்கள் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனவலிமை குறித்தும் டெஸ்ட் கெரியர் குறித்தும் பேசி இருந்தனர்.

Kohli-2

- Advertisement -

அதில் அவர்கள் விராட் கோலியின் 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை குறித்து பேசி யிருந்தனர். 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் கோலிக்கு படுமோசமாக அமைந்தது. ஏனெனில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கோலி வெறும் 134 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அந்த சுற்றுப்பயணத்தில் அவருடைய டெஸ்ட் கதை முடிந்தது என்று பலரும் நினைத்திருந்தனர்.

ஆனால் அப்படி ஒரு மோசமான சுற்றுப் பயணத்திற்கு பிறகு மனதை தளரவிடாமல் மீண்டும் அதே ஆண்டு கம்பேக் கொடுத்த கோலி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் 4 போட்டிகளில் 4 சதம் அடித்தது மட்டுமின்றி 692 ரன்கள் குவித்து தனது திறனை மீண்டும் நிரூபித்தார். இது குறித்து பேசிய கம்பீர் கூறுகையில் : 2014 ஆம் ஆண்டு இங்கிலாந்து தொடருக்கு பின்னர் கோலி வெளியேற்றப்படுவார் என்று நினைத்திருந்த நிலையில் அனைவரும் எதிர்பார்க்காத வகையில் டோனி கோலியின் மீது நம்பிக்கை வைத்து ஆதரவளித்ததால்தான் இன்றைக்கு பெரிய வீரராக திகழ்கிறார்.

Kohli

மேலும் தேர்வுக்குழுவினர் அனைவரும் கோலியின் திறமை மீது மிகுந்த நம்பிக்கை வைத்து வாய்பளித்தனர். அவர் அதனை சரியாக புரிந்து கோலி தனது திறனை வெளிப்படுத்தினார். இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணம் அவருடைய மனவலிமை தான். அவர் மனதளவில் வீக்கான வீரராக இருந்திருந்தால் இங்கிலாந்து சுற்றுப்பயணம் துடன் அவருடைய டெஸ்ட் கரியர் முடிந்திருக்கும் ஆனால் அவருடைய மனோதிடம் காரணமாக மீண்டும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கினார்.

- Advertisement -

அதன்பிறகு கோலி இன்றளவும் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் கண்ட அந்த தோல்வியில் இருந்தே அவர் மீண்டு எழுந்ததாக கம்பீர் அவரை புகழ்ந்து பேசினார். மேலும் இது குறித்து பேசிய லஷ்மணன் : இங்கிலாந்து சுற்றுப்பயணம் படுமோசமாக அமைந்தது. ஆனால் அதன் பின்னர் தற்போது கோலி மூன்று விதமான கிரிக்கெட்டிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். தொடர்ச்சியாக ரன் குவிப்பது மட்டுமின்றி இந்திய அணியும் அவர் வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் அவருடைய பணி அபாரமானது என்று கோலியை புகழ்ந்து பேசியுள்ளார்.

Kohli-1

உண்மையில் கோலி தற்போது விளையாடி வரும் சாதகத்தைப் பார்த்தால் டெண்டுல்கரின் 100 சதங்களை அவர் விரைவில் எட்டும் வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இதுவரை 70 சர்வதேச சதங்களை விளாசியுள்ள கோலிக்கு இன்னும் பல ஆண்டுகள் மீதம் இருப்பதால் அவர் நிச்சயம் டெண்டுல்கரின் 100 சதங்களை முறியடிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement