சி.எஸ்.கே அணியில் இருக்கும் பிரச்சனை தீரனும்னா தோனி இதை செய்தே ஆக வேண்டும் – கம்பீர் அட்வைஸ்

Gambhir

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியும் மற்றும் கே.எல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதி வருகின்றன.சி.எஸ்.கே அணி தனது முதல் வெற்றிக்காகவும், பஞ்சாப் அணி தங்களது வெற்றியை தொடரவும் இந்த போட்டியில் பலப்பரீச்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் சி.எஸ்.கே அணி வெற்றிப்பாதைக்கு திரும்பி வீரநடை போட வேண்டும் என்றஎதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக சிஎஸ்கே அணி தன்னுடைய முதலாவது போட்டியில் டெல்லி அணியிடம் விளையாடி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் கேப்டன் டோனி டக் அவுட் ஆகி வெளியேறினார். அதுமட்டுமின்றி அவர் பின் வரிசையில் ஏழாவது வீரராக களம் இறங்கினார்.

இந்நிலையில் டோனி செய்த தவறு குறித்தும் சிஎஸ்கே அணியில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்தும் பேட்டியளித்துள்ள கம்பீர் கூறுகையில் : சிஎஸ்கே அணியை வழிநடத்தும் தோனி பேட்டிங் வரிசையில் ஏழாவதாக களமிறங்காமல் சற்று முன்கூட்டியே களமிறங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Dhoni-1

மேலும் ஒரு அணித்தலைவராக தோனி சிஎஸ்கே அணியை வழிநடத்த ஏழாம் இடத்தில் பேட்டிங் இறங்கினால் அது சரி வராது என்றும் அதனால் பேட்டிங்கில் தன்னை முன்கூட்டியே களமிறக்கிக்கொள்ள வேண்டும் என்றும் டோனிக்கு அவர் அட்வைஸ் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணியின் பவுலிங்கில் சில பிரச்சனைகள் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Dhoni

மேலும் இதுகுறித்து அவர் பேசுகையில் தோனி : கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் நாம் பார்த்தவர் போல் தோனி தற்போது இல்லை. அப்போதெல்லாம் தோனி எதுவாக இருந்தாலும் தாமே முன்வந்து செய்ய துவங்குவார் என்னை பொருத்தவரை தோனி நான்காவது அல்லது ஐந்தாவது பேட்ஸ்மேனாக களம் இறங்க வேண்டும் அதற்கு கீழே அவர் களமிறங்க கூடாது என கம்பீர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.