பேச்சை கொறச்சி செயல்ல நீங்க யாருனு காமிங்க அப்போதான் கோப்பையை ஜெயிக்க முடியும் – கம்பீர் அட்வைஸ்

Gambhir

இதுவரை நடந்த 13 ஐபிஎல் தொடர்களில் ஒரு தொடரை கூட கைப்பற்றாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த முறை நிச்சயமாக தொடரை எப்படியாவது கைப்பற்றிய ஆகவேண்டும் என்கிற வகையில் விளையாட தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சரியான மும்பை இந்தியன்ஸ்சை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. மேலும் ஆர்சிபி தரப்பில் இருந்து வந்த தகவலின் படி இத்தனை ஆண்டுகளாக நடந்த தவறு இந்த முறை நடக்காது. ஏலத்தில் எடுத்த கிளன் மேக்ஸ்வெல் பேட்டிங் ஆர்டரை பலப்படுத்தி உள்ளதாகவும், ஜேமிசன் பௌலிங் ஆர்டரை பலப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

RcbvsMi-1

இந்த முறை நிச்சயமாக கோப்பையை கைப்பற்ற ஆர்சிபி அணி நிச்சயம் முழு வீச்சுடன் போராடும் என்று ஆர்சிபி அணி தரப்பில் இருந்து நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேசிய கௌதம் கம்பீர் ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். ஆர்சிபி அணியை திரும்பிப் பார்த்தால் இதற்கு முன் கிறிஸ் கெயில், ஷேன் வாட்சன், கெவின் பீட்டர்சன் போன்ற முன்னணி வீரர்கள் ஒரு காலத்தில் பெங்களூர் அணிக்காக இவர்களெல்லாம் விளையாடிய போதிலும் ஆர்சிபி அணியால் ஒருமுறைகூட கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

சின்னசாமி ஸ்டியத்தை தனது ஹோம் க்ரவுண்டாக கொண்டுள்ள பெங்களூரு அணியை அதன் சொந்த மைதானத்தில் உதவியோடு விளையாடி வெற்றிகளை குவித்து, ஒரு தொடரை கூட இதுவரை கைப்பற்ற இயலவில்லை என்றால் ஆர்சிபி அணியில் ஏதோ ஒரு தவறு இருக்கிறது என்று கௌதம் கம்பீர் சுட்டிக்காட்டியுள்ளார்.

rcb

மேலும் பேசிய கௌதம் கம்பீர் : ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த முறை சிறப்பான வீரர்களை ஏலத்தில் வாங்கியுள்ளது. நிச்சயமாக ஒவ்வொரு வருடத்தைப் போலவே இந்த வருடமும் பெங்களூரு அணி மிகச்சிறந்த பலமிக்க அணியாகவே தெரிகிறது.

- Advertisement -

rcb 2

இருந்தாலும் ஆர்சிபி அணி அதனுடைய பேச்சைக் குறைத்து விட்டு தொடரை எப்படி மேற்கொள்வது என்பது குறித்தும், எந்தெந்த அணியை எவ்வாறு கையாளலாம் என்பது குறித்தும் திட்டமிட்டு செயல்பட்டால் நிச்சயமாக இந்த தொடரை பெங்களூரு அணியால் கைப்பற்ற இயலும். எனவே செயலில் உங்களுடைய நடவடிக்கையை காட்டுங்கள் என்று இறுதியாக கௌதம் கம்பீர் அறிவுரை கூறி முடித்தார்.