கையில் அடிபட்ட எனக்கு ஆறுதல் கூறியது மட்டுமின்றி சி.எஸ்.கே அணியிலும் வாய்ப்பு கொடுத்த தோனிக்கு நன்றி – இளம்வீரர் நெகிழ்ச்சி

csk

நடப்பு ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் மிகச் சிறப்பாக ஆடி வருகின்றனர். சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், தேவதத் படிக்கள், தங்கராசு நடராஜன், வாஷிங்டன் சுந்தர், முருகன் அஸ்வின் வருன் சக்ரவர்த்தி என பலரும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் சென்னை அணியின் இளம் வீரரான ருதுராஜ் சென்னை அணி தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருந்த போது இவருக்கு மிடில் ஆர்டரில் ஆட வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

Ruturaj

மூன்று போட்டிகளில் ஆடி 5 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அதன் பின்னர் சென்னை அணி பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆடுவதற்கான அணியில் வாய்ப்பு கொடுத்தார் தோனி. இந்த இடத்தை கனகச்சிதமாக பயன்படுத்திக் கொண்டு ருதுராஜ் தொடர்ந்து மூன்று அரை சதங்கள் அடித்து 3 போட்டியிலும் சென்னை அணியை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதும் பெற்றிருந்தார்.

இந்த ஐபிஎல் தொடர் தொடங்கும் முன்னர் இவரது ஆட்டம் பெரிதாக பேசப்பட்டது. ஏனெனில் உள்ளூர் போட்டிகளிலும் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி நன்றாக ஆடிக்கொண்டிருந்தார். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்னதாக இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏதும் குறிப்பிடத்தக்கது.

ruturaj

அதன் பின்னர் அதில் இருந்து குணமடைந்து மீண்டும் அணிக்குத் திரும்பினார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனியுடன் இருந்த ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார் ருதுராஜ். 2016 ஆம் ஆண்டில் ரஞ்சி கோப்பை தொடரின்போது மகராஷ்டிரா அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார் ருத்துராஜ். அப்போது ஜார்க்கண்ட் அணியின் ஆலோசகராக இருந்தார் மகேந்திர சிங் தோனி.

- Advertisement -

இந்த இரண்டு அணிகளும் நேரெதிர் சந்தித்து உரையாடியபோது ருதுராஜ் காயம் காரணமாக மணிக்கட்டில் கட்டு போட்டு அமர்ந்திருந்தார். அவரிடம் சென்று ஆலோசனை கொடுத்து விட்டு அவரது கட்டுப்போட்டு இருந்த கையில் தனது கையெழுத்திட்டு  சென்றிருக்கிறார் தோனி. இந்த புகைப்படத்தை தற்போது பகிர்ந்துள்ளார்.

தோனி அப்போது அளித்த ஊக்கம் தான், நான் தற்போது சாதிக்க காரணம் அவருடன் இணைந்து பேட்டிங் செய்வது எனது கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.