சி.எஸ்.கே அணியில் தோனிக்கே அட்வைஸ் கொடுக்கும் ஒரு நபர்னா அது இவர்தான் – கெய்க்வாட் ஓபன்டாக்

CSK
- Advertisement -

மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு சிறப்பான கேப்டன் என்பது நாம் அறிந்ததே. தனது சிறப்பான கேப்டன்ஷிப் மூலம் பல்வேறு கோப்பைகளை வென்றுள்ள தோனி எண்ணிலடங்கா கோப்பைகளை வசப்படுத்தி தனிச்சிறப்பு வாய்ந்த கேப்டனாக திகழ்ந்து வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னும் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து கேப்டன்சி செய்துவரும் தோனி பல போட்டிகளில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வருகிறார்.

Dhoni

இக்கட்டான வேளையில் அவர் எடுக்கும் முடிவுகள் ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம். உலக அளவில் ஒரு சிறந்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் மற்றும் கேப்டன் என்றால் அதில் தோனி ஒருவரே நம் நினைவுக்கு வரும் அளவிற்கு தனது திட்டங்களையும், வியூகங்களையும் சரியாக அமைப்பதில் தோனிக்கு நிகர் அவர்தான். இந்நிலையில் தற்போது சிஎஸ்கே அணியின் துவக்க வீரரான கெய்க்வாட் தோனிக்கு அட்வைஸ் கொடுக்கும் ஒரு நபர் குறித்து தற்போது பேசியுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி எப்போதும் சரியாக திட்டமிடுவார். இருப்பினும் வேறு ஒருவர் அவருக்கு சில அறிவுரைகளை கொடுத்தால் அதையும் பொறுமையாக நிதானமாக கேட்பார். அந்த வகையில் தோனியுடன் மணிக்கணக்கில் பேசுவது மட்டுமின்றி தோனிக்கு அறிவுரை கொடுக்கும் நபர் சென்னை அணியில் இருக்கிறார் என்றால் அது டூபிளெஸ்ஸிஸ் தான். எனக்கு தெரிந்து அவர்கள் இருவரும் நல்ல நட்பில் இருக்கின்றனர்.

Faf

இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு மதிக்கின்றனர். அவர்கள் இருவரும் டிஸ்கஷனில் அமர்ந்தால் மணிக்கணக்கில் பேசிக் கொள்வார்கள். ஒரு ஐந்து நிமிடம், 10 நிமிடம் எல்லாம் அவர்கள் பேசமாட்டார்கள். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் அளவிற்கு அவர்கள் பேசுவார்கள் அதுமட்டுமின்றி பயிற்சியின் போதும் சரி, போட்டியின் போதும் சரி தோனி சில முக்கிய ஆலோசனைகளை டூப்லெஸிஸ்ஸிடம் கேட்பார்.

Faf 1

அதேபோன்று டூபிளெஸ்ஸிசும் தோனிக்கு அட்வைஸ் வழங்கியுள்ளதை நான் பார்த்து இருக்கிறேன் என்று கூறினார். கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து அவர்கள் இருவருக்கும் இடையே நல்ல பிணைப்பு உள்ளது டோனி மற்றும் டூபிளெஸ்ஸிஸ் ஆகியோர் தேசிய அணிக்கு தலைமை தாங்கி உள்ளதால் அவர்களுக்கு இடையே உள்ள அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர் என்று அவர் கூறினார்.

Advertisement