MS Dhoni : தோனி மட்டுமே தோல்விக்கு காரணம் இல்லை – இவ்வளவு காரணங்கள் உள்ளன

இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் கடைசியில்

Dhoni
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் கடைசியில் பொறுமையாக ஆடியதே காரணம் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Jadhav

- Advertisement -

இந்நிலையில் அவர்கள் இருவரது ஆட்டம் மட்டும் தோல்விக்குக் காரணமல்ல இந்த தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன அந்த காரணங்கள் பற்றிய கருத்துக்களே இந்த பதிவு ஆகும். நேற்றைய போட்டி பொருத்தவரையில் இந்திய அணிக்கு பல காரணங்கள் தோல்விக்கு காரணமாக அமைந்தன. அதில் முதலில் பேட்டிங் சாதகமான பிட்ச் முக்கிய காரணமாக அமைந்தது.

ற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த தேர்வு அந்த அணிக்கு முதல் சாதகமாக அமைந்தது. அதற்கடுத்து ராய் விக்கெட்டை கோட்டை விட்டது. ஹர்டிக் பாண்டியா பந்துவீச்சில் ராய் கிளவுஸில் பட்டு பந்து தோனியிடம் சென்றது. ஆனால் தோனி இதை கேட்க வேண்டாம் என்று கூறியதால் ராய் விக்கெட்டில் இருந்து தப்பி பெரிய பாட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

Bairstow 1

அதற்கு அடுத்து இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம் பெற்றது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அதுவும் பவுண்டரிகளின் எல்லைகள் குறுகிய இந்த மைதானத்தில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடியது தவறு. இதனால் இந்திய அணியின் இரண்டு சுழற்பந்துவீச்சாளர் சேர்ந்து 160 ரன்களை கொடுத்தனர்.

- Advertisement -

Chahal

அதற்கடுத்து ஸ்லோ பந்துகள். 338 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு மைதானத்தின் மந்த தன்மை காரணமாக இங்கிலாந்து வீரர்கள் நிறைய ஸ்லோ பந்துகளை வீசினார்கள். இது இந்திய பேட்ஸ்மேன்களின் திட்டத்தை மாற்றி அவர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது.

Dhoni 1

அதற்கடுத்து பும்ரா சிறப்பாக பந்துவீசினார். அதேபோல் ஷமியும் 5 விக்கெட்டுகளை எடுத்தாலும் கடைசி ஓவர்களில் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்தார். கடைசி மூன்று ஓவர்களில் அவர் 45 ரன்களை விட்டுக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்து முக்கியமான நேரத்தில் ரோகித் சர்மா மற்றும் பண்ட் ஆகியோர் ஆட்டம் இழந்தது. இவைகள் அனைத்துமே இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்று இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement