இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : ரசிகர்களுக்காக வழங்கப்பட்டுள்ள சிறப்பு அனுமதி – விவரம் இதோ

INDvsENG
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஆனது ஆகஸ்ட் மாதம் நான்காம் தேதி துவங்க உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிரென்ட் பிரிட்ஜ் இல் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்னதாக சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோற்றதால் இந்த டெஸ்ட் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை காண ரசிகர்களுக்கு 4 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை காண ரசிகர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி இங்கிலாந்தில் தற்போது பொது முடக்கம் முடிவுக்கு வந்துள்ளதால் இந்த போட்டியை காண முழு அளவுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து பிரதமர் சில தளர்வுகளை அளித்ததின் பேரில் ரசிகர்கள் தற்போது முழு அளவில் போட்டியை கண்டுகளிக்க உள்ளனர் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

fans

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் விரைவில் இந்த செய்தி உண்மையாக வாய்ப்பு உள்ளது. எனவே இந்த போட்டியை பெருமளவு ரசிகர்கள் கண்டு களிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Indian-Fans

ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் கிரிக்கெட் வீரர்கள் போட்டிகளில் முழுமையாக பங்கேற்று விளையாடி நீண்ட நாளாகிவிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்த போட்டியே ரசிகர்கள் அனைவரும் முழுஅளவில் பங்கு பெறும் முதல் போட்டியாகவும் அமைய வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement