ஐபிஎல் 2022 : ரசிகர்களை மகிழ்விக்கப்போகும் வர்ணனையாளர்களின் மொத்த பட்டியல் இதோ – தமிழில் யார்?

Commentary
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி மே 29-ஆம் தேதி வரை 65 நாட்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. இம்முறை லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் மும்பை, புனே ஆகிய நகரங்களில் மட்டுமே நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள முழு அட்டவணையின்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடரை நடத்துவதற்கு தேவையான அனைத்து வேலைகளிலும் பிசிசிஐ மும்முரமாக ஈடுபட்டுவருகிறது.

IPL

- Advertisement -

தேனை பாய்க்கும் வர்ணனையாளர்கள்:
இந்த தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் இந்த தொடரில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுவாக ஐபிஎல் போன்ற போட்டிகளை மைதானத்திற்கு சென்று நேரில் பார்ப்பது மிகவும் விறுவிறுப்பாகவும் த்ரில்லாகவும் அமையும். ஆனால் டிக்கெட் விலை, தூரம், வேலை போன்ற பல்வேறு காரணங்களால் அனைத்து ரசிகர்களாலும் ஐபிஎல் போட்டிகளை நேரடியாக பார்க்க முடியாது. அப்படிப்பட்ட நேரத்தில் பல கோடி ரசிகர்கள் இந்த போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போது போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு அதற்கு வர்ணனை செய்யும் வர்ணனையாளர்கள் உண்மையான ரசிகர்களின் காதல் தேனை பாய்ச்சுவார்கள் என்றால் மிகையாகாது. ஏனெனில் நேரடி கிரிக்கெட் போட்டிகளுக்கு வருணனை செய்வது என்பது ஒரு தனி கலையாகும்.

Gavaskar

சுரேஷ் ரெய்னா – ரவி சாஸ்திரி:
இந்நிலையில் ஐபிஎல் 2022 தொடரில் வர்ணனை செய்பவர்களின் மொத்த பட்டியலை ஒளிபரப்பும் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் ரவி சாஸ்திரியின் பெயர் இடம் பெற்றுள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பையை வென்றபோது, அதே உலக கோப்பையில் யுவராஜ் சிங் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்கவிட்டபோது அவர் செய்த வர்ணணைகள் காலத்தால் அழிக்க முடியாததாகும்.

- Advertisement -

அதைவிட கடந்த 2011-ஆம் ஆண்டு எம்எஸ் தோனி சிக்ஸர் அடித்து இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்றதை அவர் வர்ணனை செய்த வார்த்தைகளை இப்போது கேட்டாலும் ஒவ்வொரு இந்திய ரசிகனுக்கும் புல்லரிக்கும். அந்த அளவுக்கு வர்ணனை செய்வதில் கில்லாடியாக திகழும் ரவி சாஸ்திரி கடந்த 2017 – 2021 வரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்த காரணத்தால் சமீப காலங்களாக வர்ணனை செய்யவில்லை. ஆனால் தற்போது அந்த பதவியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அவர் ஐபிஎல் 2022 தொடரில் வர்ணனை செய்ய உள்ளார்.

shastri

புதிய அவதாரத்தில் சுரேஷ் ரெய்னா:
இந்த செய்தியை அறியும் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக மற்றுமொரு செய்தி உள்ளது. அதாவது கடந்த 2008 முதல் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு மிஸ்டர் ஐபிஎல் என ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னாள் நட்சத்திர இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவும் இந்த தொடரின் போது ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக கால்தடம் பதிக்க உள்ளார். கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் ரன்கள் அடிக்க முடியாமல் மோசமான பார்மில் இருந்து வந்த அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட எந்த அணியும் வாங்காதது ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை அளித்தது.

- Advertisement -

இதனால் மிஸ்டர் ஐபிஎல் இல்லாத ஒரு ஐபிஎல் தொடரா என ரசிகர்கள் சோகமாக பேசி வந்த நிலையில் தற்போது மீண்டும் ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்கும் சுரேஷ் ரெய்னாவின் வார்த்தைகளை கேட்க அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த இருவரும் இந்தி மொழியில் வர்ணனை செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளில் வர்ணணை செய்யும் வர்ணனையாளர்களின் முழு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2022 ஆங்கிலத்தில் வர்ணனை செய்பவர்கள்: ஹர்ஷா போக்லே, சுனில் கவாஸ்கர், லட்ஷ்ண் சிவராமகிருஷ்ணன், முரளி கார்த்திக், தீப் தாஸ்குப்தா, அஞ்சும் சோப்ரா, இயன் பிஷப், ஆலன் வில்கின்ஸ், பொம்மி ம்பங்க்வா, நிக்கோலஸ் நைட், டேனி மோரிசன், சைமன் டௌல், மாத்தியூ ஹேடன், கெவின் பீட்டர்சன்.

- Advertisement -

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டக்-ஒளவுட்: ஆனந் தியாகி, நேரொலி மேடொவ்ஸ், ஸ்காட் ஸ்டைரிஸ், க்ரேம் ஸ்வான்.

Hot-star

தமிழில் வர்ணனை செய்பவர்கள்: முத்துராமன், ஆர்கே, பாவனா, ஆர்ஜே பாலாஜி, பத்ரிநாத், அபினவ் முகுந்த், ரமேஷ், நானி, க்றிஸ் ஸ்ரீகாந்த்.

ஹிந்தியில் வர்ணனை செய்பவர்கள்: ஆகாஷ் சோப்ரா, இர்பான் பதான், கவுதம் கம்பிர், பார்திவ் படேல், நிகில் சோப்ரா, தான்யா புரோஹித், கிரண் மோர், ஜட்டின் சப்ரு, சுரேன் சுந்தரம், ரவி சாஸ்திரி சுரேஷ் ரெய்னா.

Srikanth

கன்னடத்தில் வர்ணனை செய்பவர்கள்: மது மைலன்கொடி, கிரண் ஸ்ரீனிவாஸ், ஸ்ரீனிவாச மூர்த்தி, விஜய் பரட்வஜ், பரத் சிப்லி, அனில் குமார், வெங்கடேஷ் பிரசாத், வேதா க்ரிஷ்ணமுர்த்தி, சுமேஷ் கோணி, வினய் குமார்.

மராத்தியில் வர்ணனை செய்பவர்கள்: குணால் டேட், பிரசன்னா சந்த், சைதன்யா சந்த், ஸ்னேஹல் பிரதான், சந்தீப் பாட்டில்

Prasad

தெலுங்கில் வர்ணனை செய்பவர்கள்: எம்ஏஎஸ் கிருஷ்ணா, என் மட்சா,விவி மேடப்பட்டி, எம்எஸ்கே பிரசாத், ரெட்டி, கேஎன் சக்ரவர்த்தி, எஸ் அவுழப்பள்ளி, கல்யாண் கிருஷ்ணா, வேணுகோபால்ராவ், டி சுமன்.

மலையாளத்தில் வர்ணனை செய்பவர்கள்: விஷ்ணு ஹரிஹரன் ஷியஸ் முகமத், டினு யோஹன்னன், ரைபி கோமேஸ், சிஎம் தீபக்

Ravi Shastri Suresh Raina

பெங்காலியில் வர்ணனை செய்பவர்கள்: சஞ்சீப் முக்ஹர்ஜீ, சரடிண்டு முக்ஹர்ஜீ, கவுதம் பட்டாச்சார்யா, ஜோயதீப் முக்ஹர்ஜீ, டெபாசிஸ் டட்டா.

Advertisement