- Advertisement -
டி20

கேப்டன் பதவிக்கு தகுதியில்லை..! யுவராஜை அசிங்கப்படுத்திய அஷ்வின்..! கொந்தளித்த ரசிகர்கள்

நேற்று(மே 16 ) நடந்த மும்பை மற்றும் பஞ்சாபிற்கு எதிரான ஐ.பி.எல் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றியை நூலளவில் தவறவிட்டது. பஞ்சாப் ஆணி தோற்றபோதும் அந்த அணியில் சிறப்பாக விளையாடிய கே எல் ராகுலை ட்விட்டரில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் பஞ்சாப் அணையின் கேப்டன் அஷ்வின் நேற்று செய்த காரியத்தால் அவரை ட்விட்டரில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

ஐ.பி.எல் தொடரின் 50 வது லீக் போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று(மே 16 ) நடைபெற்றது. மும்பை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி மும்பை அணியை பேட்டிங் செய்ய வைத்தது. இதன் பின்னர் மும்பை அணி 20 வர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்களை குவித்தது.

- Advertisement -

இதன் பின்னர் 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல். ராகுல் சிறப்பாக விளையாடினார். அந்த அணியின் மற்ற வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமியக்க 5 வது இடத்தில் யுவராஜ் சிங்கிற்கு பதிலாக அக்சர் படேல் களமிறங்கியது அனைவரையும் ஆச்சர்யத்தில் உள்ளாகியது. ஒரு கட்டத்தில் கே எல். ராகுல் 60 பந்துகளில் 94 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த யுவ்ராஜும் 3 பந்துகளில் 1 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து.

- Advertisement -

- Advertisement -

இந்த போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தாலும் அந்த அணியில் சிறப்பா விளையாடிய ராகுலுக்கு ட்விட்டரில் ரசிகர்கள் பாராட்டுகளையும், நம்பிக்கைகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த போட்டியில் அனுபவ வீரரான யுவராஜிற்கு முன்னாள் அக்சர் படேலை களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் அஷுவினை ட்விட்டரில் ரசிகர்கள் தாறு மாறாக சாடி வருகின்றனர். அஸ்வினை மோசமான கேப்டன் என்றும், அவர் வேண்டுமென்றே யுவராஜை அக்ஸருக்கு பின்னால் இறக்கி அவரை அவமானப்படுத்துவதாகவும் தங்கள் கருத்துக்ளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -
Published by