சுதர்சனுக்கு இங்கிலாந்தில் சான்ஸ் தராதீங்க.. இந்த பலவீனத்தை நேர்ல பாத்துருக்கேன்.. குழி பறிக்கும் தமிழ்நாடு கோச்

TN Coach
- Advertisement -

இங்கிலாந்து மண்ணில் இந்தியா அடுத்ததாக 5 போட்டிகள் போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் ஜூன் மாதம் துவங்குகிறது. அத்தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணியில் தமிழக வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சமீப காலங்களாகவே டிஎன்பிஎல் தொடரில் அசத்திய அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக நடப்பு சீசனில் 650க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ள அவர் விராட் கோலி போன்றவர்களை முந்தி ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். அந்த வகையில் குஜராத் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றியுள்ள அவர் உள்ளூர் கிரிக்கெட்டிலும் தமிழக அணிக்காக கணிசமாக நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

சான்ஸ் தராதீங்க:

இது போக 2023ஆம் ஆண்டு இந்தியாவுக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அரை சதத்தை அடித்த சாய் சுதர்சன் இங்கிலாந்து மண்ணில் கவுன்டி தொடரில் விளையாடி ஒரு சதத்தை அடித்த அனுபவத்தைக் கொண்டுள்ளார். அதன் காரணமாகவே அவருக்கு இங்கிலாந்து தொடரில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் சாய் சுதர்சன் ஸ்விங் ஆகக்கூடிய டுக் சிவப்பு நிற பந்துகளுக்கு எதிராக பலவீனத்தைக் கொண்டிருப்பதாக தமிழ்நாடு அணியின் முன்னாள் பயிற்சியாளர் சுலக்சன் குல்கர்ணி தெரிவித்துள்ளார்.

எனவே இங்கிலாந்தில் அவருக்கு ஆரம்பத்திலேயே பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று அவர் மறைமுகமாக கூறியுள்ளார். மும்பை அணியின் முன்னாள் கேப்டனான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சுதர்சனின் உள்ளூர் போட்டிகள் ரெக்கார்ட் சிறப்பாக இல்லை. தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக (2023 – 24) இருந்த போது சுதர்சன் வேகமான பிட்ச்சில் விளையாடுவதை குறைந்தது 2 போட்டிகளில் பார்த்துள்ளேன்”

- Advertisement -

குழி பறிக்கும் கோச்:

“அந்த 2 போட்டிகளிலும் அவர் நன்றாக விளையாடவில்லை. நகரும் பந்துகளுக்கு எதிராக அவருடைய டெக்னிக் இன்னும் முன்னேற வேண்டும். இங்கிலாந்தில் உங்களுடைய மூக்கின் கீழ் வலது புறமாக பந்தை விளையாடுவது வெற்றிகரமாக பேட்டிங் செய்வதற்கான ரகசியமாகும். ஆனால் அவர் பந்தை உடலுக்கு வெளியே விட்டு விளையாடக் கூடியவர்”

இதையும் படிங்க: வில்லியம்சன் மற்றும் சுப்மன் கில்லின் ரெக்கார்டை காலி செய்து வரலாறு நிகழ்த்திய – சூரியகுமார் யாதவ்

“எனவே அவர் அதை சரி செய்ய வேண்டும் மற்றும் உடலுக்கு நெருக்கமாக விளையாட வேண்டும். இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்பாக அவர் இந்த டெக்னிக் தடுமாற்றங்களை சரி செய்ய வேண்டும்” என்று கூறினார். இதைப் பார்க்கும் தமிழக ரசிகர்கள் தமிழ்நாடு அணியின் பயிற்சியாளராக உங்களை நியமித்ததற்கு நன்றாக சுதர்சனுக்கு குழிப் பறிக்கிறீர்கள் என்று சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement