இந்தியாவுக்கு வந்தா ரத்தம் உங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா ! இங்கிலாந்தை விளாசும் முன்னாள் வீரர்கள்

Lords Stadium ENG vs NZ
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை தொடர் ஜூன் 2-ஆம் தேதி துவங்கியது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான வரலாற்றின் முதல் டெஸ்ட் சாம்பியன் நியூசிலாந்தை புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து தனது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் அறிமுகப் போட்டியில் களமிறங்கிய மாட்டி போட்ஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக பந்துவீசி ஆரம்பம் முதலே பெரிய அச்சுறுத்தலை கொடுத்தனர். அவர்களின் ஸ்விங் வேகப்பந்துகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நியூசிலாந்தின் டாம் லாதம் 1, வில் யங் 1, கேப்டன் கேன் வில்லியம்சன் 2, டேவோன் கான்வே 3 என டாப் 4 பேட்ஸ்மேன்களும் வரிசையாக வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பினார்கள்.

- Advertisement -

திணறும் இங்கிலாந்து:
அதனால் 12/4 என படுமோசமான தொடக்கத்தை பெற்ற நியூசிலாந்தை அடுத்து களமிறங்கிய டார்ல் மிட்செல் 13, டாம் ப்ளன்டால் 14 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அவுட்டாகி கைவிட்டனர். அதனால் கடுமையான வீழ்ச்சியை சந்தித்த நியூசிலாந்து கடைசிவரை மீளமுடியாமல் முதல் இன்னிங்சில் வெறும் 132 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக காலின் டீ கிரான்ஹோம் 42* ரன்களும் டிம் சௌதீ 26 ரன்களும் எடுத்தனர். அந்த அளவுக்கு மிரட்டலாக பந்துவீசிய இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 வயதிலும் 4 விக்கெட்டுகளையும் மாட்டி போட்ஸ் 4 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார்.

அதனால் ஆரம்பத்திலேயே வெற்றி உறுதி என நினைத்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு மிகப் பெரிய ட்விஸ்ட் காத்திருந்தது. ஆம் லீஸ் மற்றும் ஜாக் கிராவ்லி ஆகிய தொடக்க வீரர்கள் பொறுப்புடன் 59 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். அதில் கிராவ்லி 43 ரன்களும் லீஸ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க அடுத்து வந்த ஓலி போப் 7, ஜோ ரூட் 11, ஜானி பேர்ஸ்டோ 1, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 1 என முக்கியமான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்தின் பதிலடி தாக்குதலுக்கு அடுத்தடுத்து அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் 116/7 என்ற நிலையில் உள்ள இங்கிலாந்து நியூசிலாந்தை விட 16 ரன்கள் பின்தங்கியுள்ளது. இதனால் இப்போட்டி 3 நாட்களுக்குள் முடியும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்தியாவுக்கு ரத்தம்:
பொதுவாக இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருக்கும் மைதானங்கள் வரலாற்றில் பேட்டிங்க்கு தான் அதிக சாதகமாக இருக்கும். அதிலும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள பிட்ச்சில் எப்போதும் லேசான பச்சை புற்கள் காணப்படும் என்பதால் பெரும்பாலும் முதல் 3 நாட்கள் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்துவார்கள். ஆனால் இந்தியா போன்ற ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் முதல் நாளிலிருந்தே பந்துவீச்சு குறிப்பாக சுழல் பந்துவீச்சு அற்புதமாக எடுபடும்.

இருப்பினும் தங்களது நாட்டில் பேட்டிங்கில் சாதகமான பிட்ச்களில் விளையாடிவிட்டு இந்திய மண்ணில் விளையாடும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சுழலுக்கு பதில் சொல்ல முடியாமல் சமீப காலங்களில் முதல் நாளே ஆல் அவுட்டாகி விடுகிறார்கள். ஆனால் அதற்காக தங்களது பேட்டிங்கை குறை கூறாத அவர்கள் சுழல் பந்து வீச்சுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படும் மோசமான பிட்ச்கள் தான் காரணம் என்று இந்தியாவை குறை கூறினார்கள். குறிப்பாக கடந்த 2021 பிப்ரவரியில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் அனைத்து போட்டிகளும் பெரும்பாலும் 3 நாட்களுக்குள் முடிந்ததால் போது சென்னை, அகமதாபாத் மைதான பிட்ச்கள் மோசமாக இருந்ததாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் உட்பட அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் இந்தியாவை சாடியிருந்தனர்.

- Advertisement -

தக்காளி சட்னி:
ஆனால் கிரிக்கெட்டின் மெக்கா, உலகிலேயே மிகச்சிறந்த கிரிக்கெட் மைதானம் என்று இங்கிலாந்து மார்தட்டும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முதல் நாளில் மட்டும் 17 விக்கெட்டுகள் விழுந்தன. அந்த அளவுக்கு அப்போட்டியின் பிட்ச் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை நியூசிலாந்தின் பேட்டிங் மோசம் என்றால் இங்கிலாந்து ஏன் ஒருசில மணி நேரத்துக்குள் 7 விக்கெட்டுகளை இழக்க வேண்டும். அதனால் கோபமடைந்துள்ள இந்திய ரசிகர்கள் எங்களுக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்று சமூக வலைதளங்களில் இங்கிலாந்தை விமர்சித்து வருகின்றனர்.

ஏனெனில் அதுபற்றி மைக்கேல் வாகன் உட்பட இங்கிலாந்திலிருந்து இதுவரை யாருமே எதுவும் பேசவில்லை. இதனால் அதிருப்தியடைந்த முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் டோடா கணேஷா தனது ட்வீட்டரில் இங்கிலாந்தை சாடியுள்ளது பின்வருமாறு. “முதல் நாளில் 17 விக்கெட்டுகள் சரிந்துள்ளது.

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்க தொடரில் மட்டும் இவங்க சிறப்பா ஆடிட்டா – உலககோப்பை இந்திய அணியில் இடம் உறுதி

இதுவே இந்தியாவாக இருந்தால் இந்நேரம் விமர்சனம் எழுந்தியருக்கும். ஆனால் இது லார்ட்ஸ் என்பது உங்களுக்கு தெரியுமா” என்று நியாயமான கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல் முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபரும் இது பற்றி விமர்சித்துள்ளார்.

Advertisement