தென்னாப்பிரிக்க தொடரில் மட்டும் இவங்க சிறப்பா ஆடிட்டா – உலககோப்பை இந்திய அணியில் இடம் உறுதி

ind
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரினை அடுத்து ஜூன் 9-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்று ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து உலக கோப்பையை அணுகிய இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

INDvsRSA toss

- Advertisement -

இதன் காரணமாக தற்போது மீண்டும் அதே போன்ற நிலைமை ஏற்படக்கூடாது என்பதற்காக அணியில் உள்ள சீனியர் வீரர்களோடு சேர்த்து ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டு அவர்கள் இது போன்ற சர்வதேச தொடர்களிலும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இந்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் கிடைக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இதன் காரணமாக தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு இந்திய உலக கோப்பை அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில் இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு 4 வீரர்களுக்கு இந்த தென்னாப்பிரிக்க தொடரின் மூலம் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

1) அர்ஷ்தீப் சிங் : நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக அளவு விக்கெட்டை இவர் வீழ்த்தவில்லை என்றாலும் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி எதிர் அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்திய அவர் 16-வது ஓவரில் இருந்து 20 ஆவது ஓவர் வரை மிகச் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இறுதிகட்ட ஓவர்களில் ரன்களை பெரிய அளவில் விட்டுக்கொடுக்காமல் வீசும் அவர் இந்த தென் ஆப்ரிக்க தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் உலக கோப்பை இந்திய அணியில் இடம் கிடைப்பது நிச்சயம் உறுதி.

- Advertisement -

2) உம்ரான் மாலிக் : நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் தொடர்ச்சியாக பந்து வீசுவதால் ஆஸ்திரேலிய மண்ணில் இவருக்கு கூடுதல் அனுகூலம் இருக்கும் என்பதனால் தென் ஆப்ரிக்க தொடரில் இவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இவருக்கும் உலக கோப்பை அணியில் வாய்ப்பு உறுதி என்று கூறப்படுகிறது.

Umran Malik Pace

3) குல்தீப் யாதவ் : நடப்பு ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசினாலும் இறுதிகட்டத்தில் அவரது பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் அடிக்கத் தொடங்கிவிட்டனர். மேலும் டி20 உலக கோப்பை தொடரில் சாஹல், ஜடேஜா, அக்சர் பட்டேல் ஆகியோருக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பதனால் தென்ஆப்பிரிக்க தொடரில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது.

இதையும் படிங்க : செட்டப் மாற்றியும் கொஞ்சம் கூட மாறல – இங்கிலாந்தை கலாய்க்கும் ரசிகர்கள், எதற்கு தெரியுமா?

4) தினேஷ் கார்த்திக் : நடப்பு ஐபிஎல் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தினேஷ் கார்த்திக் பினிஷிங் ரோலில் தனது பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுடன் போட்டியை பினிஷிங் செய்துகொடுக்கும் தினேஷ் கார்த்திக் தென்ஆப்பிரிக்க தொடரிலும் அதே ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் அவரும் உலகக்கோப்பை அணிக்கு தேர்வாவது உறுதி என்று கூறப்படுகிறது.

Advertisement