இந்த வருட ஐ.பி.எல் தொடர் இவர்கள் இல்லாமல் நடக்காது. அப்போ கேன்சல் தானா ? – வெளியான அதிர்ச்சி தகவல் இதோ

Ipl cup
- Advertisement -

கொரோனா வைரஸ் பாதிப்பு சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் பரவி வரும் நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் பல தடைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்களுக்காக மிகப்பெரும் கிரிக்கெட் திருவிழா நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

IPL-1

- Advertisement -

மார்ச் 29ஆம் தேதி துவங்க இருந்த இந்த தொடரை ஏப்ரல் 15ஆம் தேதி வரை தள்ளிவைத்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்து எப்போது தொடங்கும் என்று விடை தெரியாத நிலையில் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் மீண்டும் ஐபிஎல் தொடர் துவங்குவது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மத்திய மாநில அரசுகள் இந்த தொடரை நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் மக்கள் ஒன்று கூடும் இடங்களை மூட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும் கிரிக்கெட் மைதானங்களில் ரசிகர்கள் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு மேலும் அங்கு கிரிக்கெட் போட்டிகள் நடத்த கூடாது என்று தெரிவித்திருக்கின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஐபிஎல் அணிகள் அனைத்தும் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் நடக்காது என்ற முடிவுக்கே வந்துவிட்டனர்.

IPL

ஏனெனில் அவர்கள் நஷ்டத்தை ஏற்கவும் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களின் பாதுகாப்பே முக்கியம் என்பது காரணத்தினாலும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதால் என்பதால் இந்த வருட ஐபிஎல் தொடரில் தவிர்க்கவும் அவர்கள் முடிவெடுத்துள்ளார். மேலும் அதை மீறியும் ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்க வாய்ப்பில்லை.

- Advertisement -

ஏனெனில் வெளிநாட்டு வீரர்கள் காண விசா வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அரசு ஏப்ரல் 15ஆம் தேதி வரை வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்க முடியாது என்று அறிவித்து உள்ளது. அதனால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் சுமார் 60 வெளிநாட்டு விசா கிடைக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அப்படியே இந்திய அரசு வெளிநாட்டு வீரர்களை விளையாட அனுமதித்தாலும் அவர்களின் கிரிக்கெட் நிர்வாகம் அனுப்பி வைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ipl

இதனால் இந்த ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட சந்தேகம்தான் மேலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இதனால் வெளிநாட்டிலிருந்து வீரர்கள் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று கூறப்படுவது. இப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் ஐபிஎல் தொடர் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் முடிவுக்கு வந்துள்ள ஐபிஎல் அணி தற்போது இந்த தொடரில் ரத்து செய்யப்பட்டால் ஏற்படும் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருப்பதால் இந்த தொடர் நடைபெற வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.

Advertisement