கொரோனா வைரஸ் பாதிப்பு. வெளிநாட்டு வீரர்களுக்கு தடை. ஐ.பி.எல் நடைபெறுமா ? – ரசிகர்கள் வேதனை

Ipl cup
- Advertisement -

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தற்போது வரை 97 நாடுகளில் பாதித்துள்ளது. இந்தியாவிலும் இது தற்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது வரை 72 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் பொது மக்கள் ஒன்றாக அதிகம் கூட வேண்டாம் என சட்டம் போடப்பட்டு வருகிறது.

Ground

- Advertisement -

வெளிநாடுகளில் நடக்கும் கால்பந்து தொடரும் மூடிய மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 13வது ஐபிஎல் தொடர் வரும் 29ம் தேதி மும்பை மைதானத்தில் தொடங்க உள்ளது. மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடுவார்கள்.

அப்போது எப்படி மருத்துவ பாதுகாப்பாக போட்டியை நடத்துவது என ஏன தெரியாமல் ஒவ்வொரு அரசும் விழிபிதுங்கி யோசித்து வருகிறது. இதன் காரணமாக மகாராஷ்டிர அரசு தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனைத் தாண்டி ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாத வண்ணம் இந்திய அரசு புதிதாக கட்டுப்பாடு விதித்துள்ளது. மத்திய அரசு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணிகளுக்கான விசாவை ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 15 வரை வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவில் வந்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் ஆகியுள்ளது.

- Advertisement -

பொறுத்திருந்து பார்ப்போம் நாளை மறுநாள் மார்ச் 14ஆம் தேதி இது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறுமா? இல்லை தள்ளிப் போடப்படும் என தெரியவரும்.

IPLNSG

மேலும் வெளிநாட்டு வீரர்கள் எவ்வாறு விசா பெறுவார்கள் அதுமட்டுமின்றி எவ்வாறு போட்டி நடைபெரும் தேதிகளில் அணியில் இடம்பெறுவார்கள் என இதுவரை தெரியவில்லை, அதுமட்டுமின்றி இந்த தொடரில் உள்ள சிக்கல்களுக்கு மத்தியில் திட்டமிட்டபடி இந்த தொடர் நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisement