2018 ஐபிஎல் இந்தியர்களுக்கு ஸ்பெஷல் ஐபிஎல் ! காரணம் என்ன தெரியுமா ?

ipl
- Advertisement -

2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் தொடங்கப்பட்டது தான் “இந்தியன் பிரீமியர் லீக்” எனப்படும் ஐபிஎல் தொடர்.ஐபிஎல்-இன் முதல் சீசன் பெங்களூருவில் தொடங்கியது. ஐபிஎல்-இன் முதல் சீசன் தொடங்கப்பட்ட போதே எதிர்பார்த்ததை விட பலமடங்கு ஆதரவு கிடைத்த போதிலும் அந்த ஆதரவு ஒவ்வொரு சீசனின் போதும் இன்னும் பலமடங்கு பெருகிக்கொண்டே தான் வருகின்றது.

ipll

- Advertisement -

இந்நிலையில் இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கவுள்ளன. ஏப்ரல் 7-ம் தேதி தொடங்குகி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க போட்டி மற்றும் இறுதிப் போட்டிபை மும்பையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

8அணிகள் பங்குபெறும் இந்த ஐபிஎல்-இல் மொத்தம் 9 நகரங்களில் மொத்தம் 51 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 60 லீக் ஆட்டங்கள், 3 பிளே ஆஃப் மற்றும் இறுதி ஆட்டம் என ஒட்டுமொத்தமாக 64 ஆட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த ஐபிஎல்-இன் முதல் ஆட்டத்திலேயே வலுவான இரண்டு அணிகளான மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோத உள்ளன.

உலகிலேயே சிறந்த டி20 லீக் தொடர் ஐபிஎல் தான் எனலாம். அதே வேளையில் ஐபிஎல்-இல் பிரச்சனைகளும் அதிகமே.வீரர்கள் மற்றும் அணி வீரர்கள் சூதாட்டம் விளையாடியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இரண்டாடுகள் ஐபிஎல்-இல் விளையாட தடைசெய்யப்பட்டது.

- Advertisement -

ipln

இரண்டாண்டுகளுக்கு பின்னர் இந்த ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் கலந்து கொள்ளவுள்ளதே ரசிகர்களுக்கு உற்சாகத்தை அதிகப்படுத்தியுள்ளது.அதேவேளையில் இந்த ஐபிஎல்-இல் கலந்துகொள்ளவுள்ள 8அணிகளில் 7அணிகளின் கேப்டன்கள் இந்திய வீரர்கள் தான் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு சில தினங்களில் ஹைதராபாத் அணியின் கேப்டனாகவும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் வார்னருக்கு பதிலாக தவான் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அப்படி ஹைதராபாத் அணிக்கு தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டால் இந்த ஐபிஎல்-இல் கலந்துகொள்ள போகும் 8அணிக்கும் கேப்டன்களாக இருக்கப்போவது இந்திய வீரர்கள் என்பது கூடுதல் சிறப்பு.சென்னை அணிக்கு தோனியும், பெங்களூரு அணிக்கு கோலியும், பஞ்சாப் அணிக்கு அஸ்வினும், கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும், டெல்லி அணிக்கு கம்பீரும், மும்பை அணிக்கு ரோகித்சர்மாவும் ஏற்கனவே கேப்டன்களாக நியமிக்கப்பட்டிருந்த வேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்டீவன் ஸ்மித் மீது பால் டேம்பரிங் செய்த விவகாரத்தால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரஹானேவிற்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement