ஆஸ்திரேலியா அணி மொத்தமாக பண்ண தப்புக்கு இவர் தண்டனையை ஏத்துக்கிட்டாரு – பிளிண்டாப் கருத்து

Flintoff
- Advertisement -

2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி கொண்டிருந்தது. அப்போது ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் கேம்ரான் பாங்கிராப்ட் ஆகியோர் பந்தை சேதப்படுத்தினர். இது கேமராவில் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. அதனை தொடர்ந்து அம்பயர்கள் ஐ.சி.சி க்கு அவர்கள் மீது புகார் தெரிவித்தார்கள்.

warnersmith

- Advertisement -

அதன் பின்னர் அந்த தொடரை ஆஸ்திரேலியா அணி பாதியில் கைவிட்டு விட்டு ஆஸ்திரேலியா திரும்ப வேண்டியதாயிற்று. பின்னர் பந்தைச் சேதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தடை செய்யப்பட்டனர். இந்த கரும்புள்ளி ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் இழுக்கை ஏற்படுத்தியது.. இதனால் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்கள் மாற்றப்பட்டனர். இதன் தாக்கம் இன்றும் கூட ஆஸ்திரேலிய அணியில் உள்ளது.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆன்டரு பிளின்டாப் கூறியதாவது : ஒட்டுமொத்த ஆஸ்திரேலிய அணியும் இதில் ஈடுபட்டுள்ளது. பந்தை பந்துவீச்சாளரிடமோ அல்லது பீல்டரிடமோ இடமும் கொடுக்கும் போதே தெரிந்துவிடும் பந்து சேதப்படுத்தப்பட்டு உள்ளதா இல்லையா? என்று. ஆனால், அனைவருக்குமாக சேர்த்து பழியை சுமந்து கொண்டார் ஸ்மித். ஒட்டுமொத்த அணியும் இதில் ஈடுபட்டுள்ளது. பந்தை சேதப்படுத்துவது எல்லாம் பல ஆண்டுகாலமாக கிரிக்கெட்டில் இருக்கிறது.

Warner-1

இப்போது உள்ள தொழில்நுட்பம் மற்றும் கேமராக்கள் மூலம் இது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பந்தின் மீது இனிப்புகளை தடவுவது, சன் ஸ்கிரீன் லோசனை தடவ எல்லாவற்றையுமே பயன்படுத்தி பார்த்து விட்டனர். ஆனால் இதற்காக உப்பு காகிதத்தை பயன்படுத்துவது மிகவும் முட்டாள்தனமானது .

இதில் ஒட்டு மொத்த ஆஸ்திரேலிய அணியும் ஈடுபடவில்லை என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாதது. ஏதோ ஒரு விதத்தில் அனைவரும் இதில் ஈடுபட்டுள்ளனர் .ஆனால் ஸ்டீவன் ஸ்மித் மொத்த பழியையும் ஏற்றுக்கொண்டார் என்று கூறியுள்ளார் அவர். ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோர் ஓராண்டு இந்த செயலால் தடைசெய்பட்டு தற்போது மீண்டும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

Advertisement