MS Dhoni : தோனி இறுதி ஓவரில் மைதானத்திற்குள் செல்ல இதுவே காரணம் – பிளமிங் விளக்கம்

நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டனான தோனியின் செயல் சர்ச்சைக்கு உள்ளானது. அம்பயருடன் மைதானத்தில் போட்டிக்கு நடுவே உள்ளே சென்று நேரடி

Fleming
- Advertisement -

நேற்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் கேப்டனான தோனியின் செயல் சர்ச்சைக்கு உள்ளானது. அம்பயருடன் மைதானத்தில் போட்டிக்கு நடுவே உள்ளே சென்று நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே ராஜஸ்தான் அணியின் வீரர்கள் சிலர் தோனியின் அருகே வரவே மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Dhoni 1

- Advertisement -

ஸ்டோக்ஸ் வீசிய பந்தினை நோபால் என்று அம்பயர் கூற அதனை லெக் அம்பயர் நோபால் இல்லை என்று அறிவித்தார். இதனால் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக தோனி உள்ளே சென்று அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தோனியின் இந்த செயலை கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தோனி அம்பயருடன் என்ன பேசினார் என்று சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் பேட்டி ஒன்றினை அளித்தார்.

அதில் பிளமிங் கூறியதாவது : தோனி அம்பயருடன் சண்டையிடவோ அல்லது வாக்குவாதம் செய்யவோ மைதானத்திற்குள் செல்லவில்லை. அவர் பந்து நோபால் ஏன் கொடுக்கப்படவில்லை என்பதனை அறியவே மைதானத்திற்குள் சென்றார். அம்பயருடன் தோணி கலந்துரையாடியதில் லெக் அம்பயர் சொல்லும் முடிவே உயரத்திற்கான நோபால் முடிவாகும். ஸ்டோக்ஸ் வீசிய அந்த பந்தினை லெக் அம்பயர் சரியான பந்துதான் என்று அறிவித்தார்.

Dhoni

அதனால் லெக் அம்பயர் சொல்லும் முடிவே இறுதியானது என்று மெயின் அம்பயர் தோனியிடம் கூறினார். இந்த விவரத்தினை அறியவே தோனி மைதானத்திற்குள் சென்றார். இதனை அறிந்த பிறகு தோனி வெளியே வந்தார். ஆனால், தோனியின் இந்த செயலை நாங்களே எதிர்பார்க்கவில்லை என்று பிளமிங் கூறினார்.

Advertisement