CSK : இனி வயதில் மூத்தவர்கள் சி.எஸ்.கே அணியில் கிடையாது – பிளமிங் பேட்டி

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் மூத்த வீரர்கள் அதிகம் இடம்பிடித்து விளையாடிவந்தனர். கிட்டத்தட்ட 35 வயதை உடையவர்கள் அதிகம் இடம் பிடித்து விளையாடி வருகின்

Fleming
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னையில் மூத்த வீரர்கள் அதிகம் இடம்பிடித்து விளையாடிவந்தனர். கிட்டத்தட்ட 35 வயதை உடையவர்கள் அதிகம் இடம் பிடித்து விளையாடி வருகின்றனர். விளையாட்டுக்கு வயது ஒரு முக்கிய காரணம் என்று இந்த தொடரில் தெரிந்துவிட்டது. இதனால் அடுத்த தொடரில் சென்னை அணியில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

தொடர் முழுவதும் சென்னை அணி சிறப்பாக ஆடினாலும் வயது மூத்த வீரர்களின் சில ஆட்டங்கள் போட்டியின் முடிவை மாற்றின. அவர்களால் ஒரு சில ஆட்டத்தில் சிறப்பாக விளையாட முடிந்தாலும் தொடர்ந்து சிறப்பாக ஆடமுடியவில்லை. எனவே தொடர்ந்து ஏமாற்றி வரும் மூத்த வீரர்களை அணியில் இருந்து நீக்கும் திட்டம் சென்னை அணி நிர்வாகத்திடம் உள்ளது இது குறித்து சென்னை அணியின் பயிற்சியாளர் ஃபிளமிங் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : அணியை மாற்றும் நேரம் வந்துவிட்டது தோனி தற்போது உலக கோப்பை போட்டியில் விளையாட செல்வதால் அவர் வந்த பிறகு மீண்டும் அணியை ஒருங்கிணைக்க முடிவு செய்யப்படும். அதன்படி இளம் வீரர்கள் பலரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அணியில் விளையாட வாய்ப்பளிக்க உள்ள திட்டம் எங்களிடம் உள்ளது. அப்போதுதான் அணியில் சமநிலை உண்டாகும்.

2018csk

அதை தோனியும் அணி நிர்வாகம் முடிவு செய்வார்கள். இளம் வீரர்களை அணியில் எடுத்தால் அணிக்கு அது உத்வேகத்தை அளிக்கும் என்பதால் இந்த முடிவினை நாங்கள் எடுத்துள்ளோம் எனவே அடுத்த வருடம் சிஎஸ்கே அணியில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி என்று பிளமிங் கூறினார்.

Advertisement