இவர்கள் இல்லாததால் தான் சென்னை அணி படுமோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது – பிளமிங் வேதனை

Fleming
- Advertisement -

ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டி நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

CSK_VS_DC

- Advertisement -

அதன்படி முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் ப்ரித்வி ஷா 64 ரன்களை குவித்தார். அதன் பின்னர் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை அணியில் டூபிளெஸ்ஸிஸ் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடவில்லை. டூபிளெஸ்ஸிஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி அணி சார்பாக ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ப்ரித்வி ஷா தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த தொடர் தோல்விக்கு பிறகு பேட்டியளித்த சென்னை அணியின் பயிற்சியாளர் பின் கூறுகையில் :

Rayudu

மிக முக்கியமான வீரர்களை நாங்கள் மிஸ் செய்கிறோம். குறிப்பாக ராயுடு, ரெய்னா போன்ற வீரர்களின் இடத்தை நிரப்ப நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். நிறைய பேட்ஸ்மேன்கள் அணியில் உள்ளனர். ஆனால் அவர்களை எப்படி விளையாட வைப்பது என்பதுதான் சந்தேகமாக உள்ளது.

Raina

துவக்க வீரர்களின் சரியாக அமையவில்லை. அடுத்து போட்டிகளில் தவறுகளை சரிசெய்து களம் இறங்குவோம் என்று அவர் கூறியுள்ளார். அக்டோபர் 2 ஆம் தேதி (இரண்டாம் தேதி) வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் சென்னை அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement