இவரை வாங்கியதன் மூலம் மிடில் ஆர்டர் பலப்பட்டுள்ளது – சி.எஸ்.கே பயிற்சியாளர் சப்பைக்கட்டு

Fleming

இந்தியாவில் அடுத்த ஆண்டு 2020 ஐ.பி.எல் கோப்பைக்கான வீரர்களின் ஏலம் நேற்று 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

csk-1

இந்த ஏலத்தில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் பிளம்மிங் ஏலம் முடிந்த பிறகு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : குறைந்த தொகையுடன் சிஎஸ்கே ஏலத்தில் பங்கேற்றதால் மற்ற அணி வீரர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டியதாயிற்று என்றும் ஏலத்தில் வீரர்களுக்காக காத்திந்து எடுத்ததாக தெரிவித்தார்.

நேற்று ஏலத்தில் பியூஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கும், சாம் குரானை 5.50 கோடிக்கும் சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது. மேலும் 14.60 கோடி ரூபாய் மட்டுமே கையிலிருந்ததால் ஏலத்தில் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. ஆனால் நாங்கள் தேர்வு செய்த சாவ்லா, குரான், ஹாஸல்வுட் மற்றும் சாய் கிஷோர் போன்ற வீரர்களை ஏலத்தில் எடுத்தது மூலம் சிஎஸ்கே பவுலிங்கில் பலப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி புதுவரவு சாம் குரானின் மூலம் பேட்டிங்கிலும் தனது பங்கை அளிப்பார் என்பதால் சிஎஸ்கே மிடில் ஆர்டர் பலப்படும் என்று பேட்டியளித்தார். இருப்பினும் குரானின் செயல்பாடு எந்த அளவிற்கு சென்னை அணிக்கு பங்களிப்பை அளிக்கும் என்பது தெரியவில்லை. மேலும் குரான் குறித்த பிளம்மிங்கின் இந்த பேட்டியை சப்பைக்கட்டு கட்டுவது போல இருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -