அடுத்து வரும் 2 போட்டியிலும் இவர்கள் 2 பேரும் விளையாட மாட்டாங்க – கோச் பிளமிங் பேட்டி

Fleming
- Advertisement -

நேற்றைய முன்தினம் சனிக்கிழமை இரவு நடந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதிக்கொண்டன. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 188 ரன்கள் அடித்தது. எப்படியும் சென்னை அணிதான் வெற்றிபெறும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி சென்னை அணி நிர்ணயித்த இலக்கை வெறும் 18.4 ஒவரிலேயே எட்டி வெற்றி பெற்றது.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர்கள் தான் காரணம் என்று ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் வல்லுனர்களும் கூறிவந்தனர். சென்னை அணியின் தரப்பில் டுவைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சஹர் மற்றும் சாம் கரன் ஆகியோர் களமிறங்கினர். இவர்களில் எவருமே விக்கெட்டை கைப்பற்ற முயற்சி செய்யவில்லை. அனைவருமே டெல்லி அணியை அதிக ரன்கள் அடிக்க விடாமல் எப்படி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்ற சிந்தனை உடனேயே பவுலிங் செய்தனர்.

மேலும் யாருமே 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் தொடர்ச்சியாக பந்து வீசவில்லை. மேலும் பவுன்சர்களை இவர்கள் யாரும் பயன்படுத்தவில்லை. அதன் காரணமாகவே டெல்லி அதன் முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்து அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது. ஆட்ட முடிவில் டெல்லி அணி வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்தது. 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி அடைந்ததற்கு சென்னை அணியின் பந்து வீச்சாளர்களை மிக முக்கிய காரணமாக அனைவராலும் பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் நிச்சயமாக சென்னை அணியில் இருக்கும் லுங்கி இங்கிடி மற்றும் ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் நிச்சயமாக விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில், இவர்கள் இருவரும் ஏழு நாட்களுக்கு தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

அதன் காரணமாக இனி அடுத்த போட்டியில் பஞ்சாப்புக்கு எதிராக இவர்கள் இருவரும் களம் இறங்க மாட்டார்கள் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். ஆனால் நிச்சயமாக அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது போட்டியில் இவர்கள் இருவரும் விளையாட தயாராக இருப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement